கெய்ல்லவுயிட்டு
| கெய்ல்லவுயிட்டு Keilhauite | |
|---|---|
நார்வே நாட்டில் கிடைத்த ஓர் அரிய வகை கெய்ல்லவுயிட்டு கனிமம் | |
| பொதுவானாவை | |
| வகை | சிலிக்கேட்டு கனிமங்கள் |
| வேதி வாய்பாடு | (CaTi,Al2,Fe3+2,Y3+2)SiO5 |
கெய்ல்லவுயிட்டு (Keilhauite) என்பது (CaTi,Al2,Fe3+2,Y3+2)SiO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இட்ரோதைட்டனைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அறியப்படுகிறது.
பழுப்புக் கருப்பு நிறத்தில் உள்ள ஒரு வகை கனிம தைட்டனைட்டு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. வடிவத்தில் தைட்டனைட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. முக்கியமாக சிலிக்கான் டை ஆக்சைடு, தைட்டானியம் டை ஆக்சைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் இட்ரியம் ஆக்சைடு ஆகிய கனிமங்களுடன் கலந்துள்ளது. கெய்ல்லவுயிட்டு 1841 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. நார்வே நாட்டின் புவியியலாளரான பால்டாசர் மத்தியாசு கெய்ல்லாவு (1797–1858) என்பவரின் நினைவாக கெய்ல்லவுயிட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]
தைட்டனைட்டு கனிமத்திலிருந்து கெய்ல்லவுயிட்டு சற்று மாறுபட்டுள்ளது.[2] இக்கனிமத்தில் 10 சதவீதம் வரை கால்சியம் பதிலீடு செய்யப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Keilhauite on Mindat
- ↑ "Titanite Mineral Data". webmineral.com. Retrieved 2025-03-02.