கெய்ர் நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெய்ர் நடனம்
An important festival of the region with spacial celebration .the Tribal, colorful attired carrying sticks,performing the Gair dance. - panoramio.jpg
கெய்ர் நடன அலங்காரம்
வகைநாட்டுப்புற நடனம்
மூலம்ராஜஸ்தான், இந்தியா

கெய்ர் நடனம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பில் சமூகத்தினரால் நிகழ்த்தப்படுகிறது.இருப்பினும் ராஜஸ்தான் முழுவதும் பரவலாக இந்த நடனம் ஆடப்படுகிறது.[1]

தோற்றம் மற்றும் பின்னணி[தொகு]

ராஜஸ்தானின் பில் சமூகம் இந்தியாவின் பல ஆதிவாசி குழுக்களுல் ஒன்றாகும். ராஜ்புதன ஆட்சியின் போது, ​​அவர்கள் ஷிகாரிகள் (வேட்டைக்காரர்கள்) மற்றும் இராணுவப் பணியாளர்களாகப் பணியாற்றினர். கெய்ர் நடனத்திலுள்ள உள்ள நடன அசைவுகளும் நடன அமைப்புகளும் பில் மக்களின் இராணுவ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.[2] இது கெய்ர் கல்னா, கெய்ர் கும்னா, கெய்ர் கெல்னா மற்றும் கெய்ர் நச்னா என்றும் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தானின் மேவார் மற்றும் மார்வார் பகுதிகளில் மிகவும் பிரபலமான இந்த நடனம் பில் சமூகத்தினரால் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. கெய்ர் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி ஆடப்படுவது இல்லை. இடத்திற்கு இடம் அதன் சொந்த தாளம்,வட்டமாக நிற்கும் பாணி, ஆடைகள் போன்றவை மாறுபடுகின்றன. இது ஹோலி மற்றும் ஜன்மஸ்தமி போன்ற பண்டிகை சந்தர்ப்பங்களில் இந்த நடனம் ஆடப்படுகிறது. வண்ணமயமான உடைகள், பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் வசீகரிக்கும் நடனப் படிநிலைகள் ஆகியவை இந்த நடனத்தின் சிறப்பம்சங்களாக உள்ளன. இந்த நாட்டுப்புற கலை வடிவத்தை ரசிக்க உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகை புாிகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவராலும் நிகழ்த்தப்படும் கெய்ர் நடனம் பில் மக்களால் ஆடப்படும் பாரம்பரிய நடனமான பில் நடனத்திலிருந்து உருவாகியதாகக் கருதப்படுகிறது.

நடன நிகழ்த்துமுறை[தொகு]

வழக்கமாக, நடனக் கலைஞர்கள் ஒரு பெரிய வட்டத்தில் கைகளில் மரக் குச்சியுடன் நடனமாடுகிறார்கள். ஆண்களும் பெண்களும் நிகழ்த்தும் இந்த மகிழ்ச்சியான நடன வடிவத்தில் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. ஆண்கள் நீண்ட, பளபளப்பான ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள், அவை முழு நீள பாவாடை போன்ற தோற்றத்தில் திறந்த அமைப்புடைய ஆடைகளாகும் . நடனத்தின் தொடக்கத்தில், பங்கேற்பாளர்கள் இரண்டு வட்டங்களை உருவாக்குகிறார்கள். பெண்கள், ஒரு சிறிய உள் வட்டத்தை உருவாக்குகி நிற்க அவா்களை ஆண்கள் சூழ்ந்துகொண்டு வெளிப்புறமாக ஒரு பெரிய வட்டத்தை உருவாக்குகிறார்கள், மேலும் அவர்கள் முதலில் கடிகார திசையில் நகர்கிறார்கள், பின்னர் கடிகார எதிர் திசையில் நகர்ந்து குச்சிகளை ஒன்றாக அடித்து, மேளத்தை அடிப்பதன் மூலம் நடனத்தின் தாளத்தை தீர்மானிக்கிறார்கள். நடனம் தொடரும்போது, ​​பங்கேற்பாளர்கள் இடங்களை மாற்றிக்கொண்டு பெண்கள் வெளிப்புறம் வர, ஆண்கள் உள் புறமாகச் சென்று உள் வட்டத்தை உருவாக்குகிறார்கள்.

சில வேளைகளில் இது ஆண்களால் மட்டும் ஆடப்படும் நாட்டுப்புற கலையாக உள்ளது. அந்த நேரத்தில், நடனக் கலைஞரின் திறன் மற்றும் நடனப் புலமை ஆகியவற்றைப் பொறுத்து தொடர்ச்சியான அரை சுழல்கள் நடனத்தின் எளிமையான பதிப்பை உருவாக்குகின்றன, இது தொடர்ச்சியான சிக்கலான மாதிரி படிநிலைகளுடன் நடனமாடப்படுகிறது. குச்சிகளைத் அடிப்பது நடனத்திற்கு வீரியமான தன்மையையும் நிலையான தாளநயத்தையும் தருகிறது. பில் மக்களின் கெய்ர் நடனங்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வாள்கள், அம்புகள் மற்றும் குச்சிகளை சுமந்து கொண்டு நிகழ்த்தப்படுவதால் இது பார்வையாளா்களைக் கவரும் முக்கிய ஈர்ப்பு சக்தியாக விளங்குகிறது. இந்த நடனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆட்டமுறையில் பல வேறுபாடுகள் உள்ளன.[3]

நடனக்கருவிகள்[தொகு]

இந்த நாட்டுப்புற நடனத்துடன் வரும் இசைக்கருவிகள் டோல், நாகடா, தோலாக் மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இனிமையான நாட்டுப்புறப் பாடல்களுடன் மற்றும் மயக்கும் பின்னணி இசை அனைவரையும் துடிப்புடன் நடனமாட ஊக்குவிக்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

கெய்ர் நடனம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்ர்_நடனம்&oldid=2935868" இருந்து மீள்விக்கப்பட்டது