கெய்ரோ திரைப்பட உயர்கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெய்ரோ திரைப்பட உயர்கல்வி நிறுவனம் (Cairo Higher Institute of Cinema) 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்வி தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்கப்பட்ட முதலாவது நிறுவனம் இதுவாகும். பண்பாட்டு அமைச்சகத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கல்லூரிகள் மற்றும் திரைப்பட நிறுவனங்களுக்கான அனைத்துலக அமைப்பில் இந்நிறுவனமும் ஓர் உறுப்பினர் ஆகும். பல ஆண்டுகளாக இந்நிறுவனம் பல சர்வதேச விழாக்களில் பங்குபெற்று பல விருதுகளும் கௌரவ சான்றிதழ்களும் பெற்றுள்ளது. இளங்கலை பட்டம் தவிர திரைப்படம் குறித்த முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வியை அளித்து அதற்கான பட்டங்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ahmed Zaki, 55, Leading Man in Egyptian Films, Is Dead". The New York Times. பார்த்த நாள் 10-09-2013.

புற இணைப்புகள்[தொகு]