கெய்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெய்சேரி (Kayseri, Turkish pronunciation: [ˈKajseɾi] ; கிரேக்கம்: Καισάρεια‎ ) என்பது துருக்கியின் நடு அனடோலியாவில் உள்ள நகரமாகும். இது பெரிய அளவில் தொழில்மயமான ஒரு நகரம் ஆகும். இது கெய்சேரி மாகாணத்தின் தலைநகராக உள்ளது. கெய்சேரி நகரம் கெய்சர மாநகராட்சியின் எல்லைகளால் வரையறுக்கபட்டுள்ளது. இது கட்டமைப்புரீதியாக ஐந்து மாநகர மாவட்டங்களை உள்ளடக்கியது. முதலில் கோகாசினன் மற்றும் மெலிகாசியின் ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கொண்டதாகவே இருந்தது. 2004 முதல், ஹாகலர், அன்செசு மற்றும் தலாஸ் ஆகிய மாவட்டங்களும் இதில் உள்ளன.

கெய்சேரியானது செயலற்ற எரிமலையான எர்சியஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது நகரத்தையடுத்து 3,916 மீட்டர்கள் (12,848 அடிகள்) உயரமானதாக இது உள்ளது. துருக்கியின் முதல்தர நகரங்களின் வரையறைக்குடபட்ட முதல் அணியில் இந்த நகரம் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. [1]

செல்யூக் அரசமரபு காலத்தில் தொடங்கி பல வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்த நகரம் கொண்டுள்ளது. கப்படோசியா நகருக்கு சர்வதேச சுற்றுலா பயணிகள் செல்லும் வழியில் இந்த நகரம் உள்ளதால், இது பொதுவாக பார்வையிடப்படுகிறது. கெய்சேரியில் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன: நகர மையத்திலும் அதைச் சுற்றியுள்ள செல்யூக் மற்றும் உதுமானியர் கால நினைவுச் சின்னங்கள் உள்ளன. எர்சியஸ் மலையானது மலையேற்றம் மற்றும் மலையேற்ற பயிற்சி மையமாக உள்ளது. ஜமந்தே ஆறானது ஒரு சறுக்குப்படகு பயண மையமாக உள்ளது. கோல்டெப், அர்னாஸ், தலாஸ் மற்றும் தேவேலியின் வரலாற்று இடங்கள் உள்ளன. கெய்சேரி எர்கிலெட் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் சேவை உள்ளது. இந்நகரம் எர்சியஸ் பல்கலைக்கழகத்தின் தாயகமாகும்.

துருக்கிய புள்ளிவிவர நிறுவனத்தின் கூற்றுப்படி 2011 நிலவரப்படி கெய்சேரி நகரில் 844,656 மக்கள் தொகை இருந்தது; கெய்சேரி மாகாணத்தில் 1,234,651 மக்கள் தொகை இருந்தது. [2] [3]

சொற்பிறப்பியல்[தொகு]

கெய்சேரி முதலில் மசாக்கா என்று அழைக்கப்பட்டது ( ஆர்மேனியன் பாரம்பரியத்தின்படி, இது மிஷாக் என்பவரால் நிறுவப்பட்டு, பெயரிடப்பட்டது) [4] மேலும் இது ஸ்ட்ராபோவிற்காக அறியப்பட்டது. அந்த நேரத்தில் இது ரோமானிய மாகாணமான சிலிசியாவின் தலைநகரமாக இருந்தது. கபடோசியாவின் மன்னர் (கிமு 163-130) அரியாராத்ஸ் வி யூசிப்ஸுக்குப் பிறகு, ஆர்கேயஸில் (கிரேக்க மொழியில் ἡβεια ἡ πρὸς τῷ αίῳ) யூசிபியா என்றும் அழைக்கப்பட்டது. கி.பி 14 இல் சீசர் அகஸ்டஸ் இறந்தபின், சீசர் அகஸ்டசின் நினைவாக, இதன் பெயரானது மீண்டும் கபடோசியாவின் கடைசி மன்னர் (கிமு 36-கி.பி 14) "கபடோசியாவில் சிசேரியா" (ரோமானிய மொழியில் சிசேரியா என்ற பெயருடன் உள்ள வேறு நகரங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக) என்று மாற்றினர். முஸ்லீம் அரேபியர்கள் வந்தபோது, அவர்கள் Kaisariyah (பாரம்பரிய இலத்தீன் மொழியில் C என்ற எழுத்து K என உச்சரிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க) என்று எழுதப்பட்ட பெயரை தழுவி கைசரியா என பயன்படுத்தினர். மேலும் 1080 ஆம் ஆண்டில் செல்யூக் துருக்கியர்கள் நகரத்தைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோது இது மெல்ல மெல்ல மருவி இறுதியில் கெய்செரியாக மாறியது. [5]

நிலவியல்[தொகு]

காலநிலை[தொகு]

கெய்சேரி பொதுவாக குளிர்ந்த அரை வறண்ட காலநிலையும், குளிர் காலங்களில் குளிர்மிக்க, பனி பொழியும் கால நிலையும், கோடைக்காலங்களில் வெப்பமான, வறண்ட கால நிலையைக் கொண்ட கொண்ட கோப்பன் காலநிலை வகைப்பாட்டைக் ( பி.எஸ்.கே ), கொண்டுள்ளது. மழைப்பொழிவானது பெரும்பாலும் வசந்த காலத்தில், கோடையின் துவக்கத்தில் மற்றும் இலையுதிர்காலத்தின் போது பொழிகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. ESI. "Islamic Calvinists: Change and Conservatism in Central Anatolia" (PDF). European Stability Initiative, Berlin. 2005-12-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2005-09-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2011". citypopulation.de. 14 January 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Türkiye İstatistik Kurumu". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. Olmstead, A.T. (1929), Two Stone Idols from Asia Minor at the University of Illinois. pp. 313. (https://www.jstor.org/stable/4236961?read-now=1&refreqid=excelsior%3Aeb2f654f8d09b7b6fd30f32d7d1679fa&seq=4#page_scan_tab_contents)
  5. Everett-Heath, John (2005). "Kayseri". Concise Dictionary of World Place-Names. Oxford University Press. 2007-12-11 அன்று பார்க்கப்பட்டது.
பிழை காட்டு: <ref> tag with name "tff1" defined in <references> is not used in prior text.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்சேரி&oldid=3057511" இருந்து மீள்விக்கப்பட்டது