கெயில் கிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெயில் கிம்
2017 இல் கெயில் கிம்
பிறப்புபெப்ரவரி 20, 1977 (1977-02-20) (அகவை 47)[1]
தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா[1]
Residesடாம்ப்பா, புளோரிடா, U.S.[2]
துணைராபர்ட் இர்வின்
கல்விரயர்சன் பல்கலைக்கழகம்
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்கெயில் கிம்
லா ஃபெலினா[1]
Billed height5 அடி 4 அங் (1.63 m)[2]
Billed weight120 lb (54 kg)[2]
Billed fromடாம்ப்பா, புளோரிடா
தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா[3]
தென் கொரியா[2]
பயிற்சியாளர்ரான் ஹட்ச்சன்[1]
ராப் எட்செவர்ரியா[1]
டேவ் பின்லே[2]
முதல் போட்டிடிசம்பர் 2000[2]
ஓய்வு பெற்றதுடிசம்பர் 28, 2019

கெயில் கிம் (பிறப்பு: பிப்ரவரி 20, 1977) [1] ஒரு ஓய்வு பெற்ற கனேடிய-அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தற்போது இம்பாக்ட் மல்யுத்தத்தில் ஒப்பந்தமாகியுள்ளார், அங்கு இவர் ஒரு தயாரிப்பாளராக பணியாற்றுகிறார் . இம்பாக்ட் மல்யுத்தத்தில், இவர் ஏழு முறை நாக் அவுட்ஸ் வாகையாளராகி சாதனை படைத்துள்ளார். உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்திம் தனது முதல் போட்டியில் பெண்கள் உலக வாகையாளர் பட்டத்தினை வென்றதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்

2002 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு கிம் தனது தொழில் மல்யுத்தத்தை கனேடிய-அமெரிக்க சுயாதீன சுற்றுகளில் இருந்து தொடங்கினார், . தனது முதல் போட்டியிலேயே வாகையாளர் பட்டத்தினை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். கிம் செப்டம்பர் 2005 இல் டி என் ஏ மல்யுத்தப் போட்டிகளில் சேர்ந்தார். இறுதியில் அக்டோபர் 2007 இல் டி.என்.ஏ நாக் அவுட் வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார். பின்னர் இவர் ஆகஸ்ட் 2008 இல் டி.என்.ஏவை விட்டு வெளியேறினார், மூன்று மாதங்களுக்குப் பிறகு உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திற்குத் திரும்பினார், அங்கு இவர் 2011 வரை மல்யுத்தப் போடிகளில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டில் புரோ ரெஸ்லிங் இல்லஸ்ரேட்டட் வெளியிட்ட மிகச் சிறந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளின் பட்டியலினை வெளியிட்டது. அதில் இவர் முதலிடம் பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டில் இவர் டி என் ஏ ரெஸ்லிங் ஹால் ஆஃப் பேமாக அறிவிக்கப்பட்டார்.

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை[தொகு]

சுயாதீன சுற்று (2000-2002, 2005)[தொகு]

ரைர்சன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கிம் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாற முடிவு செய்து டொராண்டோவில் உள்ள ரான் ஹட்ச்சனின் ஸ்கூல் ஆப் புரோ மல்யுத்தத்தில் சேர்ந்தார். ஸ்கொயர் சர்கிள் புரோ மல்யுத்த ஜிம்மில், ராப் எட்செவாரியாவிடம் இருந்து கூடுதல் பயிற்சி பெற்றார்.[1] இவர் டிசம்பர் 2000 இல் அங்கு அறிமுகமானார், அதில் முகமூடி அணிந்து கொண்டு , தெற்கு ஒன்ராறியோவை தளமாகக் கொண்ட அபோகாலிப்ஸ் மல்யுத்த கூட்டமைப்பில் "பூனைகளின் ராணி" எனும் அடை மொழியுடன் இவர் மல்யுத்தம் செய்தார். இருந்த போதிலும் , "மாஸ்க் வெர்சஸ் ஹேர்" போட்டியில் ட்ரேசி ப்ரூக்ஸ் என்பவரால் இவரின் முகமூடி அவிழ்த்துவிடப்பட்டது..[4][5] பார்டர் சிட்டி மல்யுத்தம் போன்ற நிகழ்வுகளில் மல்யுத்தம் செய்வதற்காக கிம் கனேடிய சுயாதீன சுற்றுகளில் இரண்டு ஆண்டுகள் கலந்துகொண்டார்.[6]

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், கிம் ஜனவரி 22, 2005 அன்று தென் கொரியாவில் மிட்-அட்லாண்டிக் வாகையாளர் ஷிப் மல்யுத்தத்தில் தோன்றினார், ஒரு இணை வாகையாளருக்கான போட்டியில் லாலிபாப்புடன் இணைந்தார், அந்தப் போட்டியில் இவர்கள் மாலியா ஹோசாகா மற்றும் நிடியா ஆகியோரை தோற்கடித்தனர்.[2] ஜூன் 26 அன்று உலகத் தொடர் மல்யுத்தப் போட்டிகளில் , ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த போட்டியில் கிம் அறிமுகமானார், ஒற்றையர் போட்டியில் நிடியாவிடம் தோற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சிட்னியில் நடந்த மற்றொரு டபிள்யூ எஸ் டபிள்யூ நிகழ்வில், கிம் நிடியாவை மறுபடியும் தோற்கடித்தார். அடுத்த நாள் இரவு, கிம் ஏ.ஜே. ஸ்டைல்களுடன் இணைந்து நிடியா மற்றும் கிறிஸ்டோபர் டேனியல்ஸை ஆகிய கலவை இணையினை தோற்கடித்தனர்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Kamchen, Richard. "Gail Kim". SLAM! Sports: Wrestling. Canadian Online Explorer. Archived from the original on 2013-01-15. பார்க்கப்பட்ட நாள் 2010-09-04.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Gail Kim's profile". Online World of Wrestling. Black Pants, Inc. Archived from the original on 2012-05-13. பார்க்கப்பட்ட நாள் 2010-09-04.
  3. "Gail Kim". Total Nonstop Action Wrestling. Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
  4. Chambers, Doug (2002-04-26). "La Felina—'Queen of the Cats'". SLAM! Sports: Wrestling. Canadian Online Explorer. Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2009-09-05.
  5. Saelhof, Todd (2004-08-01). "One on one with Gail Kim". Calgary Sun. Canadian Online Explorer. Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2009-09-05.
  6. "Gail Kim wins WWE Women's belt". SLAM! Sports: Wrestling. Canadian Online Explorer. 2003-07-01. Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2008-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெயில்_கிம்&oldid=2866631" இலிருந்து மீள்விக்கப்பட்டது