உள்ளடக்கத்துக்குச் செல்

கெயில்கவுயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெயில்கவுயிட்டு
Keilhauite
நார்வே நாட்டில் கிடைத்த ஓர் அரிய கெயில்கௌயிட்டு படிகம்
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(CaTi,Al2,Fe3+2,Y3+2)SiO5

கெயில்கவுயிட்டு (Keilhauitee) என்பது (CaTi,Al2,Fe2(3+),Y2(3+))SiO5என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இட்ரோதைட்டனைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. பழுப்புக் கருப்பு நிறத்தில் காணப்படும் தைட்டனைட்டு கனிம வகையாக கெய்ல்கவுயிட்டு கனிமம் கருதப்படுகிறது. வடிவத்தில் டைட்டனைட்டுடன் தொடர்புடையதாகவும் முக்கியமாக சிலிக்கான் டை ஆக்சைடு, தைட்டானியம் டை ஆக்சைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் இட்ரியம் ஆக்சைடு ஆகிய சேர்மங்களைக் கொண்டுள்ளது. இந்த வகை 1841 ஆம் ஆண்டில் கண்டுபிடித்து விவரிக்கப்பட்டது. நார்வே நாட்டு புவியியலாளரான பால்டாசர் மத்தியாசு கெய்ல்கவு (1797–1858) என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டது.

கெய்ல்கௌயிட்டு தைட்டனைட்டிலிருந்து வேறுபடுகிறது. தைட்டனைட்டில் கால்சியம் 10 சதவீதம் (Y,Ce)2O3வரை பதிலீடு செய்யப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெயில்கவுயிட்டு&oldid=4242472" இலிருந்து மீள்விக்கப்பட்டது