கெம்பாவி
கெம்பாவி Kembhavi | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 16°39′N 76°32′E / 16.650°N 76.533°E | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | யாதகிரி |
| வட்டம் (தாலுகா) | சோராப்பூர் |
| அரசு | |
| • வகை | நகரம் |
| • நிர்வாகம் | கெம்பாவி நகர நகராட்சி ஆணையம் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 13,077 |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-கேஏ |
| வாகனப் பதிவு | KA 33 |
| இணையதளம் | karnataka |
கெம்பாவி (Kembhavi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு நகரமாகும்.[1][2] கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தின் சோராப்பூர் தாலுகாவில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்கு எண்கோண வடிவிலான ஒரு பழைய கிணறு உள்ளது. ஒற்றைக் கல்லால் ஆன ஒரு கல்லறையும் உள்ளது.
மக்கள்தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கெம்பாவி நகரத்தின் மக்கள் தொகை 13077 ஆகும். இம்மக்கள் தொகையில் 6679 ஆண்களும் 6398 பெண்களும் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கெம்பாவி கிராமத்தில் மொத்தம் 3086 குடும்பங்கள் வசித்தன. கிராமத்தின் மக்கள் தொகை 17346 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 8808 ஆண்களும் 8538 பெண்களும் இருந்தனர்.
அப்போது கெம்பாவி கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 2809 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 16.19% ஆகும். கெம்பாவி கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 969 ஆகும். இது கர்நாடக மாநில சராசரியான 973 என்பதை விடக்குறைவு. குழந்தை பாலின விகிதம் 906 ஆக இருந்தது. இது கர்நாடக சராசரியான 948 என்பதை விடக்குறைவு.
கர்நாடகாவை விட கெம்பாவி கிராமம் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டிருந்தது. 2011 ஆம் ஆண்டில், கெம்பாவி கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 68.07% ஆக இருந்தது, இது கர்நாடகாவின் 75.36% என்பதை விடக்குறைவாகும். கெம்பாவியில் ஆண் எழுத்தறிவு விகிதம் 77.75% ஆகவும், பெண் எழுத்தறிவு விகிதம் 58.23% ஆகவும் இருந்தது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Village code= 350800 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-18.
- ↑ "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. Retrieved 2008-12-18. Kembhavi, Gulbarga, Karnataka
- ↑ "Kembhavi Village Population - Shorapur - Yadgir, Karnataka". www.census2011.co.in. Retrieved 2025-12-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Built Up Area : 205745.78 Sq.Ft.