கெமால் அதாதுர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெமால் அதாதுர்க்

கெமால் அதாதுர்க் துணிவுக்கும்  தேசபக்திக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, தாழ்ந்துவிட்ட துருக்கியை தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர் இவர். அதாதுர்க் என்றால் துருக்கியின் தந்தை என்று பெயர். இவரின் இயற்பெயர் முஸ்தபா. ஏழைக்குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் இராணுவப் பள்ளியில் சேர்ந்து கடின உழைப்பாலும், கணிதத் திறமையாலும் அனைவருடைய மதிப்பைப் பெற்றவர். இவருடைய அசாதாரண அறிவாற்றலைக் கண்ட ஆசிரியர் இவருக்கு கெமால் என்ற பெயரைச்சூட்டினார். அதற்கு குறையில்லாதவர் எனப்பொருள்படும். அரசைத் திருத்த வேண்டுமென்று அரசியலில் ஈடுபட்டார். இவரால் அரசுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பயந்த அரசு அவரை டமாஸ்கசுக்கு நாடு கடத்தியது. எனினும் தனது கடின உழைப்பால் இராணுவத்தில் கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். 1911-ல் வட ஆப்பிரிக்காவில் இத்தாலியுடன் போர் மூண்டபோது கெமால் தீரத்துடன் போராடினார். ஆதன் காரணமாக மேஜராகவும், 1913-ல் கர்னலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

1914-ல் முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக துருக்கி போரில் ஈடுபட்டது. இது தவறு என்று கெமால் கருதினார். தன் நாட்டுக்காக போரில் கலந்துகொண்டார். 1915-ல் காலிபோலியில் பிரிட்டிஷ் படைகளை முறியடித்தார். ரஷ்யர்கள் துருக்கிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார். எனினும் போரில் முடிவில் துருக்கி தன் நாட்டின் பெரும் பகுதியையும் சுதந்திரத்தையும் இழந்தது. கெமால் இராணுவத்திலிருந்து விலகி மக்களைத் திரட்டி அங்காரா நகரைக் கைப்பற்றினார். பழைய பாராளுமன்ற உறுப்பினர்களில் தனக்கு ஆதரவாளர்களின் கூட்டத்தைக் கூட்டினார். அதில் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922-ல் கிரீஸ் துருக்கியைத் தாக்கியபோது இவர் படைத்தளபதியாக செயல்பட்டு கிரீஸ் படைகள் முழுவதுமாக விரட்டியடிக்கப்பட்டன. 1923-ல் துருக்கி புதிய குடியரசானபோது கெமால் ஜனாதிபதியானார். மேல் நாடுகளுக்கு இணையாக மாற்ற பல தீவிர நடவடிக்கைகள் எடுத்தார். சுல்தான் பதவியும், கலிபா பதவியும் ஒழிக்கப்பட்டன. மன்னரின் அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டது. பர்தா முறை நீக்கப்பட்டது. தலைநகர் இஸ்தான் புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. எல்லோருக்கும் கல்வி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவுடன் நாட்டின் தொழில்களும், வியாபாரமும் பெருகின. விவசாயத்தில் நவீன முறைகள் புகுத்தப்பட்டன. இவர் மூன்று முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938-ல் தனது 58-வது வயதில் காலமானார். இவர் காலத்தில் துருக்கி புதிய நூற்றாண்டில் நடைபோடத் தொடங்கியது. கெமால் அதாதுர்க் துணிவுக்கும் தேச பக்திக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி, தாழ்ந்துவிட்ட துருக்கியை தலைநிமிர்ந்து நிற்க வைத்தவர் இவர். அதாதுர்க் என்றால் துருக்கியின் தந்தை என்று பெயர். இவரின் இயற்பெயர் முஸ்தபா. ஏழைக்குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் இராணுவப் பள்ளியில் சேர்ந்து கடின உழைப்பாலும், கணிதத் திறமையாலும் அனைவருடைய மதிப்பைப் பெற்றவர். இவருடைய அசாதாரண அறிவாற்றலைக் கண்ட ஆசிரியர் இவருக்கு கெமால் என்ற பெயரைச்சூட்டினார். அதற்கு குறையில்லாதவர் எனப்பொருள்படும். அரசைத் திருத்த வேண்டுமென்று அரசியலில் ஈடுபட்டார். இவரால் அரசுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பயந்த அரசு அவரை டமாஸ்கசுக்கு நாடு கடத்தியது. எனினும் தனது கடின உழைப்பால் இராணுவத்தில் கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். 1911-ல் வட ஆப்பிரிக்காவில் இத்தாலியுடன் போர் மூண்டபோது கெமால் தீரத்துடன் போராடினார். ஆதன் காரணமாக மேஜராகவும், 1913-ல் கர்னலாகவும் பதவி உயர்வு பெற்றார். 1914-ல் முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக துருக்கி போரில் ஈடுபட்டது. இது தவறு என்று கெமால் கருதினார். தன் நாட்டுக்காக போரில் கலந்துகொண்டார். 1915-ல் காலிபோலியில் பிரிட்டிஷ் படைகளை முறியடித்தார். ரஷ்யர்கள் துருக்கிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார். எனினும் போரில் முடிவில் துருக்கி தன் நாட்டின் பெரும் பகுதியையும் சுதந்திரத்தையும் இழந்தது. கெமால் இராணுவத்திலிருந்து விலகி மக்களைத் திரட்டி அங்காரா நகரைக் கைப்பற்றினார். பழைய பாராளுமன்ற உறுப்பினர்களில் தனக்கு ஆதரவாளர்களின் கூட்டத்தைக் கூட்டினார். அதில் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922-ல் கிரீஸ் துருக்கியைத் தாக்கியபோது இவர் படைத்தளபதியாக செயல்பட்டு கிரீஸ் படைகள் முழுவதுமாக விரட்டியடிக்கப்பட்டன. 1923-ல் துருக்கி புதிய குடியரசானபோது கெமால் ஜனாதிபதியானார். மேல் நாடுகளுக்கு இணையாக மாற்ற பல தீவிர நடவடிக்கைகள் எடுத்தார். சுல்தான் பதவியும், கலிபா பதவியும் ஒழிக்கப்பட்டன. மன்னரின் அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டது. பர்தா முறை நீக்கப்பட்டது. தலைநகர் இஸ்தான் புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. எல்லோருக்கும் கல்வி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவுடன் நாட்டின் தொழில்களும், வியாபாரமும் பெருகின. விவசாயத்தில் நவீன முறைகள் புகுத்தப்பட்டன. இவர் மூன்று முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938-ல் தனது 58-வது வயதில் காலமானார். இவர் காலத்தில் துருக்கி புதிய நூற்றாண்டில் நடைபோடத் தொடங்கியது.

பார்வை நூல் - வரலாற்றில் வாழ்பவர்கள். 1999; S.சங்கரன்

                    பூங்கொடி பதிப்பகம் ,சென்னை-4

பகுப்பு ;வரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமால்_அதாதுர்க்&oldid=2723539" இருந்து மீள்விக்கப்பட்டது