கெப்லர்-20எஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்லர்-20எஃப் புறக்கோள் நமது சூரிய மண்டலக் கோள்களுடன் ஒப்பீடு

கெப்லர்-20எஃப் (Kepler-20f) என்பது கெப்லர்-20 என்ற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள். நமது பூமியை ஒத்த பருமனை உடைய புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இக்கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்பு 2011, டிசம்பர் 20 ஆம் நாள் வெளியிடப்பட்டது[1][2][3][4]. இக்கோள் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் ஆரையுடன் ஒப்பிடும்போது இதன் ஆரை 1.03 மடங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 800°ப (427°C ஆகும். தனது விண்மீனில் இருந்து 10 மில்லியன் மைல்கள் (16.1 மில்லியன் கிமீ) தூரத்தில் சுற்று வருகிறது. இத்தூரம் புதன் கோள் சூரியனைச் சுற்றி வரும் தூரத்துக்கு சமனாகும்.

மேற்கோள்கள்[தொகு]


  1. Johnson, Michele (20 டிசம்பர் 2011). "NASA Discovers First Earth-size Planets Beyond Our Solar System". நாசா. பார்க்கப்பட்ட நாள் 2011-12-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Hand, Eric (20 டிசம்பர் 2011). "Kepler discovers first Earth-sized exoplanets". நேச்சர். பார்க்கப்பட்ட நாள் 2011-12-20. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Moskowitz, Clara (20 December 2011). "First Ever 'Earth-Sized' Alien Planets Discovered". Fox News Channel. http://www.foxnews.com/scitech/2011/12/20/first-ever-earth-sized-alien-planets-discovered/. பார்த்த நாள்: 2011-12-20. 
  4. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-20எஃப்&oldid=1885172" இலிருந்து மீள்விக்கப்பட்டது