கெப்லர்-10பி
| புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
|---|---|---|
| தாய் விண்மீன் | ||
| விண்மீன் | கெப்லர்-10[1] | |
| விண்மீன் தொகுதி | டிரேக்கொ | |
| வலது ஏறுகை | (α) | 19h 02m 43s |
| சாய்வு | (δ) | +50° 14′ 29″ |
| தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 10.96 |
| தொலைவு | 564 ± 88 ஒஆ (173 ± 27 புடைநொடி) | |
| அலைமாலை வகை | G | |
| இருப்புசார்ந்த இயல்புகள் | ||
| திணிவு | (m) | 0.0143 MJ |
| ஆரை | (r) | 0.127 ± 0.0003 RJ |
| சுற்றுவட்ட இயல்புகள் | ||
| அரைப் பேரச்சு | (a) | 0.01684 AU |
| மையப்பிறழ்ச்சி | (e) | 0 |
| சுற்றுக்காலம் | (P) | 0.837495 நா |
| சாய்வு | (i) | 84.4° |
| கண்டுபிடிப்பு | ||
| கண்டறிந்த நாள் | 2011-01-10 | |
| கண்டுபிடிப்பாளர்(கள்) | பத்தாலா மற்றும் ஏனையோர். | |
| கண்டுபிடித்த முறை | கடக்கும் முறை (கெப்லர் விண்வெளித் திட்டம்) | |
| கண்டுபிடிப்பு நிலை | அறிவிப்பு | |
கெப்லர்-10பி (Kepler-10b) என்பது நாசாவின் கெப்லர் விண்வெளித் திட்டம் கண்டுபிடித்த பல புறக்கோள்களில் ஒன்றாகும். 2011 சனவரியில் இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளுள் மிகவும் சிறியதாகும். கெப்லர் திட்டம் கண்டுபிடித்த புறக்கோள்களில் இதுவே பாறைகளைக் கொண்டதும் ஆகும். 2009 மே முதல் 2010 சனவரி வரை சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து இந்த புறக்கோள் பற்றி அறியப்பட்டுள்ளது[2]. கெப்லர்-10பி புவியை விட 1.4 மடங்கு பெரியதாகும். புதன் கோளில் இருந்து சூரியனுகுள்ள தூரத்தை விட 20 மடங்கு குறைவான தூரத்தில் தனது சூரியனை இது ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வருகிறது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 1600 கெல்வின் ஆகும்.
முக்கியத்துவம்
[தொகு]
கெப்லர்-10பி புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டமை வேறு பல பாறைப் புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும், புவியை ஒத்த புறக்கோள்களைத் தேடும் முயற்சிக்கும் வழிவகுத்துள்ளதாக இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Summary Table of Kepler Discoveries". NASA. 2010-08-26. Archived from the original on 2017-04-01. Retrieved 2010-09-01.
- ↑ "NASA'S Kepler Mission Discovers Its First Rocky Planet". NASA. 2011-01-10. Retrieved 2011-01-10.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் கெல்பர்-10பி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- YouTube: Narrated Animation on Kepler-10b
- Kepler Discoveries: Kepler-10b பரணிடப்பட்டது 2015-11-06 at the வந்தவழி இயந்திரம்
