உள்ளடக்கத்துக்குச் செல்

கெனான் இஓஎஸ் 5டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெனான் இஓஎஸ் 5டி
வகைDSLR
பட உணர்வு35.8 x 23.9 மி. மீ. CMOS
கூடிய படப்பிரிதிறன்4,368 × 2,912 (12.8 படவணுக்கள்)
வில்லைஇடைமாற்றக்கூடிய கெனான் இஎப் வில்லை சட்டம்
திரைமின்னணு குவியத் தளம்
திரை வேக அளவு30 முதல் 1/8000 நொடி + Bulb
Exposure meteringTTL, முழுத்துளை, 35 பகுதிகள்
Exposure modesமுழுத் தானியக்கம், திட்டப்படி, முன்னுரிமைத் திரைப்படல் , துளைமுன்னுரிமை, கைமுறை
Metering modesமதிப்பீடு, ஒரு பகுதி, Spot, C/Wgt நடுத்தரம்
குவிமையம் இடங்கள்9 பயனர் புள்ளிகள் + 6 துணைப்புள்ளிகள்
குவிய முறைகள்One-shot, AI Servo, AI-Focus, கைமுறை
தொடர் படப்பிடிப்பு3 படங்கள்/நொடி
கண்கருவிகண்மட்ட ஐங்கண்ணாடி ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி, 95% தழுவு அளவு, 0.87× உருப்பெருக்கம்
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 50-3200
வெள்ளைச் சமநிலை வளைப்பு±3 நிறுத்தம் 1-நிறுத்த அதிகரிப்பில்
பின் திரை2.5 அங்குலம் (63 மி. மீ.), 230,000 படவணுக்கள்
சேமிப்பு நினைவகம்SDSC
SDHC
உலர் மின்கலம்Li-Ion BP-511மின்னேற்றம் செய்யலாம்
நிறை810 கிராம்கள் ( உடற்பகுதி மட்டும்)
Optional battery packsBP-511A, BP-514, BP-511, BP-512.
BG-E4 மின்கலப்புள்ளி AA மின்கலங்களையும் பயன்படுத்தலாம்
தயாரிப்புஜப்பான்

கெனான் இஓஎஸ் 5டி (ஆங்கிலம்:Cannon EOS 5D) 12.8 மாபடவணு உடைய எண்ணிம தனிவில்லை பிரதிபலிப்பு (DSLR) படமி ஆகும். இப்படமியை கெனான் நிறுவனம், 22, ஆகத்து, 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட்டது.[1] அன்றைய நாளில், இதன் விலை இஓஎஸ் 20 படமியை விட அதிகமாகவும், இஓஎஸ் 1டி மார்க் II படமி வரிசையை விட குறைவாகவும் இருந்தது. இப்படமியிலுள்ள (EF="Electro-Focus") வில்லைச் சட்டத்தின், பிற வில்லைகளையும் ஏற்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

இப்படமியின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக, 17 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு, கெனான் இஓஅஸ் 5டி மார்க்II என்ற படமியை, கெனான் நிறுவனம் வெளியிட்டது.[2]

இதனையும் அடுத்து, மூன்றாம் கட்ட வளர்ச்சியாக, 2 மார்ச்சு 2012 ஆம் ஆண்டில், கெனான் இஓஎஸ் 5டி மார்க்III (Canon EOS 5D Mark III) என்ற படமி வெளிவந்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Canon(22 August 2005). "NEW CANON EOS 5D IS A PREMIUM DIGITAL SLR AT AN AFFORDABLE...". செய்திக் குறிப்பு.
  2. ↑ Canon(17 செப்டம்பர் 2008). "CANON U.S.A. INTRODUCES THE HIGHLY ANTICIPATED EOS 5D MARK II DSLR...". செய்திக் குறிப்பு.
  3. ↑ Canon(2 March 2012). "Canon U.S.A. Announces the Highly Anticipated EOS 5D Mark III Digital SLR Camera". செய்திக் குறிப்பு.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனான்_இஓஎஸ்_5டி&oldid=4302357" இலிருந்து மீள்விக்கப்பட்டது