கெட்ட பெறய
கெட்ட பெறய (Geta Beraya) சிங்களவர்களது கலாசாரத்தைப் பறைசாற்றும் ஒரு பாரம்பரியம் மிக்க இசைக்கருவி ஆகும். இது மலையக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் ஒரு மேள இசைக் கருவியாகும். சிங்களவர் மத்தியில் உயர்நிலை, தாழ்நிலை என்ற அடிப்படையில் பிரிவினைகள் காணப்படுகின்றன. உயர்நிலை (உடரட்ட) எனும்போது மலையகப் பகுதிகளில் வாழ்பவர்கள் என்பதைவிட உயர்நிலப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் என்று கொள்ளப்படுகின்றது. ஏனையோர் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்களைக் குறிக்கும்.
உயர்நிலைப் பகுதியில் குறிப்பாக கண்டிப் பகுதியில் வாழக்கூடிய சிங்கள மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு இசைக்கருவியே இந்த கெட பெறய ஆகும். விசேடமாக கண்டி நடனத்துடன் இணைந்ததாக இது காணப்படுகின்றது. கண்டி நடனம் ஆடுகையில் கட்டாயமாக வாசிக்கப்படும் பாரம்பரியமான இசைக்கருவிகளுள் இது முக்கியமானதாகும்.
வடிவம்
[தொகு]இம்மேளமானது மத்தியிலிருந்து இரண்டு பக்கமும் குறுகிச் செல்லுகின்ற வடிவத்தைக் கொண்டது. ஆனால், தாழ்நில சிங்கள மக்கள் பயன்படுத்தும் யக் பெறய இவ்வாறு குறுகிச் செல்லும் வடிவத்தையுடையதாக காணப்படமாட்டாது. அது ஒரு உருளை வடிவில் அமைந்திருக்கும்.
தோல்
[தொகு]ஆரம்பகாலங்களில் கெ(ட்)ட பெறய மேளத்திற்கு மான் தோலே பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆட்டுத் தோலும் பயன்படுத்தப்படுகின்றது.
தாளநயத்துடன் வாசிக்கப்படும்
[தொகு]கெ(ட்)ட பெறய வாசிக்கப்படும் போது ஒரு தாளநயத்துடன் வாசிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடனத்துடன் இணைந்ததாக இது இருப்பதினால் நடனத்திற்கேற்ற வகையிலே இதன் தாளம் அமைந்திருக்கும். சிங்களவருக்கு மட்டுமே உரித்தான ஒரு இசைக்கருவியாக இது கொள்ளப்படுகின்றது. இதைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் சிங்களக் கலைஞர்களே.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கெட்ட பெறய பரணிடப்பட்டது 2011-11-08 at the வந்தவழி இயந்திரம்