உள்ளடக்கத்துக்குச் செல்

கெச் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெச் மாவட்டம்
ضلع کیچ
کیچ دمگ
மாவட்டம்
மேல்:கடாக் கோட்டை
கீழ்:தேஜாபானின் ஈச்ச மரங்கள்
பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தின் அமைவிடம்
பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம் பலூசிஸ்தான்
கோட்டம்மக்ரான்
தலைமையிடம்தர்பத்
அரசு
  வகைமாவட்ட ஆட்சித் தலைவர்
பரப்பளவு
  மொத்தம்22,539 km2 (8,702 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
  மொத்தம்10,60,931
  அடர்த்தி47.1/km2 (122/sq mi)
சராசரி எழுத்தறிவு
  எழுத்தறிவு49.65%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்7

கெச் மாவட்டம் (Kech District) பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்த பலூசிஸ்தான் மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிடம் தர்பத் நகரம் ஆகும். இது குவாதர் மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ளது. சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை இம்மாவட்டத்தின் வழியாக குவாதர் துறைமுக நகரம் வரை செல்கிறது.

அமைவிடம்

[தொகு]

கெச் மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் ஈரான் நாட்டின் சீசுத்தானும் பலூச்சிஸ்தான் மாகாணம், தெற்கில் குவாதர் மாவட்டம் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

கெச் மாவட்டம் தர்பத் வட்டம், மண்ட் வட்டம், டம்ப் வட்டம், பால்னிகோர் வட்டம், புலேதோ வட்டம், தஸ்த் வட்டம், ஹோசப் வட்டம் 7 வருவாய் வட்டங்களையும், ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[4][5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 253,475 குடியிருப்புகள் கொண்ட கெச் மாவட்ட மக்கள் தொகை 2,53,475 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 110 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 49.65% ஆகும்.[6][7]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30.97% ஆக உள்ளனர்.[8]நகர்புறங்களில் 36.44% மக்கள் வாழ்கின்றனர்.[6]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கிறித்தவம் போன்ற பிற சமயத்தவர்கள் 0.41% ஆக உள்ளனர்.[9]

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 99.73% மக்கள் பேசுகின்றனர். பிராகுயி மொழி, சிந்தி மொழிகளை சிறுபான்மையினர் பேசுகின்றனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  3. "Kech District background". Balochistan Police website. Archived from the original on 12 December 2008. Retrieved 6 February 2024.
  4. "Tehsils & Unions in the District of Kech/Turbat". National Reconstruction Bureau, Government of Pakistan. Archived from the original on 2012-08-05. Retrieved 27 March 2023.
  5. "Zila, Tehsil & Town Councils Membership for Balochistan". National Reconstruction Bureau, Government of Pakistan. Archived from the original on 26 March 2012. Retrieved 27 March 2023.
  6. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  9. "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.

26°00′N 63°00′E / 26.000°N 63.000°E / 26.000; 63.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெச்_மாவட்டம்&oldid=4278574" இலிருந்து மீள்விக்கப்பட்டது