செங்கிஸ் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெங்கிஸ் கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செங்கிஸ் கான்
Genghis Khan
மங்கோலியப் பேரரசன்
YuanEmperorAlbumGenghisPortrait.jpg
ஆட்சி 1206–1227
முடிசூட்டு விழா 1206 (மங்கோலியாவின் அனாண் ஆற்றில் குறுல்த்தாய் என்னும் இடத்தில்
பின்வந்தவர் ஒகோடி கான்
வாரிசு(கள்) ஜோசி
ஜகாடேய்
ஒகோடி
டோளுய்
பலர்
முழுப்பெயர்
Cinggis qagan.svg

(இயற்பெயர்:தமுஜின்)
மங்கோலிய மொழியில் வலது.
மரபு போரிஜின்
தந்தை எசுக்கெய்
தாய் ஓவெலுன்

செங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227), இயற்பயர் தெமுஜின், மங்கோலியப் பேரரசைத் தாபித்த மங்கோலிய அரசராவார். 1206 இல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதிலும் உலகளவில் பாராட்டப்பட்டார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] அவரது இறப்புக்கு பிறகு அவரது அரசு உலக வரலாற்றில் மிகப்பெரிய பேரரசு ஆனது. அவர் வடகிழக்கு ஆசியாவின் நாடோடி பழங்குடியினர் பலரை இணைத்து, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார். பேரரசு ஸ்தாபகத்திற்ககுப் பிறகு மற்றும் "செங்கிஸ் கான்" ஆக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மிகவும் வெற்றிகரமான மங்கோலிய படையெடுப்புளை யூரேஷியாவின் மீது தொடங்கினார். அவரது வாழ்நாளில் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்புகள் காரா கிடாய், காகசஸ், மற்றும் குவாரஸ்மியன், மேற்கத்திய ஸியா மற்றும் ஜின் வம்சாவளியினருக்கு எதிரானவை உள்ளிட்டவையாகும். அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், மங்கோலியப் பேரரசானது மத்திய ஆசியா மற்றும் சீனாவின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. செங்கிஸ் கான் இறப்பிற்கு முன், தனக்கு அடுத்த அரசராக ஒகொடே கானை நியமித்து அவரது பேரரசை பிரித்து பிள்ளைகளும் பேரன்களும் கொடுத்தார். அவர் மேற்கு ஸியாவை தோற்கடித்த பின்னர் 1227 ல் இறந்தார். அவர் மங்கோலியாவில் குறிப்பிடப்படாத இடத்தில் புதைக்கப்பட்டார். அவரது சந்ததிகள் பிற நாடுகளை கைப்பற்றல் அல்லது உருவாக்குவதன் மூலம் யூரேசியாவின் பெரும்பகுதி, நவீன கால சீனா, கொரியா, காக்கேசியா, மத்திய ஆசியா, மற்றும் நவீன கிழக்கு ஐரோப்பாவில் கணிசமான பகுதிகள், ரஷ்யா, மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளை மங்கோலியப் பேரரசில் இணைத்தனர். இந்த படையெடுப்புகளில் பல உள்ளூர் மக்கள் பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டனர், இதன் விளைவாக, செங்கிஸ் கான் மற்றும் அவரது பேரரசுக்கு பிற மக்களின் உள்ளூர் வரலாறுகளில் பீதி அடையவைக்கும் புகழ் உள்ளது. தனது இராணுவ சாதனைகளுக்கு அப்பால், செங்கிஸ்கான், பிற வழிகளிலும் மங்கோலியப் பேரரசை முன்னேற்றினார்.

இளமைப் பருவம்[தொகு]

பரம்பரை[தொகு]

தெமுஜின் தனது தந்தை வழியில் காபூல் கான், அம்பகை மற்றும் ஹோடுலா கானுடன் தொடர்புடையவர். இதில் ஹோடுலா கான் கமக் மங்கோலிய கூட்டமைப்புக்கு தலைமை தாங்கியவராவார். இவர்கள் அனைவரும் கி.பி. 900ல் வாழ்ந்த போடோன்சார் முன்ஹாக்கின் வழிவந்தவர்கள் ஆவர். கி.பி. 1161ல் ஜுர்சென் ஜின் வம்சத்தவர் மங்கோலியர்களிடமிருந்து பிரிந்து டார்டர்களுடன் இணைந்து காபூல் கானை கொன்றனர். இத்தகைய உயர் வம்சத்தில் பிறந்ததின் காரணமாக தெமுஜினுக்கு மற்ற நாடோடிகளை இணைப்பது எளிதாயிருந்தது.

பிறப்பு[தொகு]

ஒனான் ஆறு

தெமுஜினின் இளமைப் பருவம் பற்றி மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. அந்த தகவல்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றன. தெமுஜின் கி.பி.1162ல் நவீன மங்கோலியாவின் தலைநகரான உலன் பட்டொருக்கு அருகில், புர்கான் கல்துன் மலை, ஒனான், கெர்லான் ஆறுகளுக்கு அருகில் வடக்கு மங்கோலியாவில் பிறந்தார். மங்கோலியர்களின் ரகசிய வரலாற்றின் அடிப்படையில் தெமுஜின் பிறக்கும்போதே கையில் இரத்த உறைவுடன் பிறந்தார். இது பிற்காலத்தில் அவர் மாபெரும் தலைவனாக வரவுள்ளதை குறித்ததாக அறியப்படுகிறது. இவர் தனது தந்தை யேசுகெயின் இரண்டாவது மகன், தாய் ஹோயெலுனின் முதல் மகன் ஆவார்.

இளமைப்பருவம் மற்றும் குடும்பம்[தொகு]

தெமுஜினுக்கு ஹசர், ஹச்சியுன், தெமுகே என மூன்று சகோதரர்களும், தெமுலென் என ஒரு சகோதரியும் இருந்தனர். தன் தந்தையின் முதல் மனைவியின் வழியில் பெக்டெர், பெல்குடெய் என இரு ஒன்றுவிட்ட சகோதரர்களும் இருந்தனர்.மங்கோலியாவின் மற்ற நாடோடிகளைப் போலவே தெமுஜினின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் க டினமாக இருந்தது. தெமுஜினின் தந்தை அவரது 9ம் வயதில் கொங்கிராட் வம்சத்தைச் சேர்ந்த போர்டே என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயித்தார். இதன் காரணமாக தெமுஜின் திருமண வயதான 12 வரை அப்பெண்ணின் குடும்பத்துக்கு பணியாற்ற அனுப்பிவைக்கப்பட்டார்.

வீட்டிற்கு செல்லும் வழியில், அவரது தந்தை நீண்ட கால மங்கோலிய எதிரிகளான டார்ட்டர்களைச் சந்திக்க நேரிட்டது, அவர்கள் அவரை உணவு உண்ண அழைத்து விஷம் வைத்துக் கொன்றனர். இதனை அறிந்து வீட்டிற்கு விரைந்த தெமுஜினை அவரது பழங்குடியினக் கூட்டம் அவரது குடும்பத்துடன் சேர்த்து ஒதுக்கி வைத்தது.

அடுத்த சில ஆண்டுகளுக்கு, அவரது குடும்பம் வறுமையில் வாழ்ந்தது, பெரும்பாலும் காட்டுப் பழங்கள், காளைப் பிரேதங்கள், அணில்கள், தெமுஜினும் அவரது சகோதரர்களும் கொன்ற சிறு விலங்குகள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்ந்தது. இந்நிலையில் பெக்டெர் குடும்பத்தின் மூத்த ஆண் என்ற காரணத்தால் ஹோயெலுனை (அவன் சொந்த தாயாக இல்லாத காரணத்தால்) உரிமை கோரும் தகுதி பெற்றான். இதன் காரணமாக தெமுஜினுக்கு பெக்டெர் மேல் வெறுப்பு ஏற்பட்டது. ஒரு நாள் வேட்டையாடும்போது பெக்டெரை தெமுஜின் தனது சகோதரன் ஹசருடன் சேர்ந்து கொன்றார்.

கி.பி.1177ல் தெமுஜின் தனது தந்தையின் முன்னாள் நண்பர்களான "டாய்ச்சியுட்"களால் அடிமையாக கடத்தப்பட்டு, குற்றவாளியின் கழுத்தில் தண்டனையாக சுமத்தப்படும் பலகையில் பிணைக்கப்பட்டார். அங்கிருந்து ஓர் இரவில் இரக்க குணமுடைய ஒரு காவலாளியின் உதவியால் கூடாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தப்பினார். இந்தத் தப்பிப்பு தெமுஜினுக்கு சிறு புகழைக் கொடுத்தது. விரைவில், ஜெல்மெ மற்றும் போர்ஷு அவருடன் இணைந்தனர். அவர்கள் மற்றும் அக்காவலாளியின் மகனான ஷிலௌன் இறுதியில் செங்கிஸ்கானின் தளபதிகள் ஆகினர்.

ஆட்சி[தொகு]

1167 - ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் தெமுசின் போர்சிகின் என்பதாகும். 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இதற்கு 'அண்டத்தின் சக்கரவர்த்தி' என்பது பொருள்.இவர் 1198- ஆம் ஆண்டு தன் தந்தையின் நண்பர்களுடனும் சீனாவைச் சார்ந்த ஜின் என்னும் அரச வம்சத்துடனும் கூட்டணி வைத்துக்கொண்டார். 1200 தொடங்கி 1202 - ஆம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தத்தில் தனது குழந்தை பருவ நண்பனான ஜமுகாவை வென்றார். அதே ஆண்டில் டார்டாரையும் வெற்றி கொண்டார். தொடர்ந்து 1206 - ஆம் ஆண்டு மங்கோலிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1211 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் முறிந்ததையடுத்து செங்கிஸ்கானின் படைகள் ஜின் அரச வம்சத்தை முற்றுகையிட்டன. மீண்டும் 1214 - ஆம் ஆண்டு ஜின் அரச வம்சத்துடன் அமைதிக்கான நடவடிக்கை எடுத்தார். ஆனால், தொடர்ந்து வந்த ஆண்டிலேயே ஜின் அரச வம்சத்தைத் தாக்கி அதன் அரசரை நாட்டை விட்டுத் துரத்தினார்.

1216 முதல் 1221 வரையிலான ஆண்டுகளில் மங்கோலிய அரசாட்சியை மேற்கு திசையிலும் விரிவுபடுத்தினார். தற்போதைய ஆப்கானிஸ்தான், ஈராக் வரையிலும். தெற்கு ரஷ்யா வரையிலான பகுதிகளுக்கும் அவர் அரசரானார். 1221 - ஆம் ஆண்டில் ஐலல்-அல்-டின் என்பவரை வென்று தன் இராஜியத்தை உலகில் மிகப்பெரியதாக ஆக்கினார்.1226 - ஆம் ஆண்டு ஜின் அரசன் மீண்டும் தன் படையுடன் செங்கிஸ்கானைத் தாக்கினான். ஆனால், செங்கிஸ்கான் அவனை வென்றார்.

1227 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் தனது 65 ஆவது வயதில் இறந்தார். இறப்பிற்கு ஒரு வருடத்திற்கு முன் குதிரையேறும்பொது தவறி விழுந்தார், இதன் காரணமாக எற்பட்ட காயத்தால் அவர் இறந்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Genghis Khan The Emperor Of All Men

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கிஸ்_கான்&oldid=2121574" இருந்து மீள்விக்கப்பட்டது