கெக்கசன் பாசு
கெக்கசன் பாசு Kehkashan Basu | |
---|---|
பிறப்பு | சூன் 5, 2000 துபாய், ஐக்கிய அரபு அமீரகம்[1][2] |
தேசியம் | கனடா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தொராண்டோ பல்கலைக்கழகம்[2] கோர்னெல் பல்கலைக்கழகம்[3] |
பணி | சுற்றுச்சூழல்வாதி, மனித உரிமை ஆர்வலர்[1] |
செயற்பாட்டுக் காலம் | 2008–present |
அமைப்பு(கள்) | பசுமை நம்பிக்கை அறக்கட்டளை |
விருதுகள் | பன்னாட்டு குழந்தைகள் அமைதி பரிசு, 2016 |
வலைத்தளம் | |
|
கெக்கசன் பாசு (Kehkashan Basu)[4][5] (பிறப்பு சூன் 5, 2000)[6][7] என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தினைச் சேர்ந்த கனாடாவின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.[8][9][1][10] இவர் அமைதி, குழந்தைகள் உரிமைகள், நிலையான வளர்ச்சிக்கான கல்வி, அணு ஆயுதக் குறைப்பு, பாலின சமத்துவம் மற்றும் காலநிலை நீதிக்காகவும் சேவையாற்றி வருகிறார்.[11][12] பாசு பசுமை நம்பிக்கை (கிரீன் ஹோப்) அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர்,[13] உலக எதிர்கால குழுவின் இளைய உறுப்பினர்,[14] உலக மதங்களின் பாராளுமன்றத்தின் இளைய அறங்காவலர்,[15] குழந்தை உரிமை இளைய நட்சத்திரம் அமைப்பின் உறுப்பினர் மற்றும் பன்னாட்டுக் குழந்தைகளின் அமைதி பரிசு (2016) பெற்றவர் ஆவார்.[16]
வாழ்க்கை
[தொகு]கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய பெற்றோருக்குத் துபாயில் சூன் 5ஆம் தேதி கெக்கசன் மகளாகப் பிறந்தார்.[17] பாசு துபாயில் உள்ள டெய்ரா பன்னாட்டுப் பள்ளியில் பயின்றார். கனடாவின் டொராண்டோவில் உள்ள வடக்கு தொராண்டோ கல்லூரியில் பட்டம் பெற்றார்.[17][18] சூன் 2022-ல், கெக்கசன் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் உயர் தனித்துவத்துடன் கூடிய இளங்கலை கலைப் பட்டம் பெற்றார். இங்கு இவர் சுற்றுச்சூழல் ஆய்வுகள், பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள் மற்றும் உடல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் ஆகியவற்றில் இரட்டைச் சிறுமைப்படுத்தலில் தேர்ச்சி பெற்றார்.[19][20][21] பாசு தற்போது கார்னெல் பல்கலைக்கழக சாமுவேல் கர்டிஸ் ஜான்சன் மேலாண்மை பட்ட பள்ளியில் முதுகலை வணிகம் படித்தார்.[22] இவர் தனது 8 வயதில், மரங்களை நட்டு, இளைஞர்களை மீளுருவாக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். 11 வயதில், பாசு இந்தோனேசியாவில் துன்சா-குழந்தைகள் மற்றும் இளைஞர் மாநாட்டில் உரையாற்றினார்.
அடுத்த ஆண்டு கெக்கசன் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான மாநாட்டில் (ரியோ + 20) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இளைய பிரதிநிதி என்ற சாதனையைப் படைத்தார்.[7]
சுற்றுச்சூழல் பணி
[தொகு]பாசு 2012-ல் பசுமை நம்பிக்கை அறக்கட்டளையை நிறுவினார், ஐ. நா. வின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களைக் கற்பித்தல் மற்றும் செயல்படுத்தும் இலக்குடன், மரம் நடுதல் போன்ற அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[23][24] காலநிலை நீதி,[25] நிலச் சீரழிவை நிறுத்துதல், நிலையான நுகர்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல், பல்லுயிர் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாத்தல் போன்றவற்றில் சமூகத்தை மையமாகக் கொண்ட திட்டங்கள் மூலம் உலகளவில் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களில் இந்த அமைப்பு இளைஞர்களை ஈடுபடுத்துகிறது. தற்போது கனடா, சுரிநாம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், கத்தார், பகுரைன், அமெரிக்கா, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, ஆத்திரேலியா, கென்யா, பகாமாசு, சிலி, வியட்நாம், சீசெல்சு, ஸ்வீடன், நெதர்லாந்து, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பெரு, இலங்கை, இந்தியா, நேபாளம், வங்களாதேசம், கிரிபட்டி மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் மொத்தம் 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பு வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களைச் செயல்படுத்துவதற்கான பட்டறைகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதன் மூலம் செயல்படுகிறது.[13][26]
புத்தகம்
[தொகு]2017ஆம் ஆண்டில், பாசு நம்பிக்கை மரம் ("தி ட்ரீ ஆஃப் ஹோப்") என்ற சிறுகதை புத்தகத்தை, இல்லஸ்ட்ரேட்டரான கரேன் வெப்-மீக்குடன் இணைந்து வெளியிட்டார்.[12][27] இந்தப் புத்தகத்தின் கதை, இளம் பெண் ஒருவர் பாலைவனத்தில் மரங்களை நட்டு, நண்பர்களை உதவியுடன் பாலைவனச்சோலையை உருவாக்குவதை மையமாகக் கொண்டது.[7]
2021ஆம் ஆண்டில், நடைபெற்ற முதல் ஆண்டு அமைதிக் கல்வி நாள் மாநாட்டில் பாசு முக்கியப் பேச்சாளராக இருந்தார்.[28]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]- பாசு 2016-ல் பன்னாட்டுக் குழந்தைகள் அமைதிப் பரிசை வென்றார்[7]
- பாசு 2016-ல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வாகையாளராக அங்கீகரிக்கப்பட்டார்.[1]
- 2018-ல் கனடாவின் செல்வாக்கு மிக்க 25 பெண்களில் ஒருவராகப் பாசு பெயரிடப்பட்டார்.[10]
- 2020ஆம் ஆண்டு வசந்த காலத்தில் தேசிய புவியியல் இளையோர் நிதியுதவிக்குப் பாசு பட்டியலிடப்பட்டார்.[29]
- பாசு 2021-ல் போர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்டவர்களில் 30 கல்விப் பிரிவில் இளையவராகப் பெயரிடப்பட்டார்.[30]
- 2021-ல் இளைஞர்களின் எழுத்தறிவுக்குப் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக உலக எழுத்தறிவு விருதைப் பாசு வென்றார்[31]
- பாசு 2022-ல் கனடாவின் சிறந்த சேவைக்கானப் பதக்கம் பாசுவிற்குக் குடிமக்கள் பிரிவில் வழங்கப்பட்டது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Kehkashan Basu, Environmental and child rights activist, United Arab Emirates". www.standup4humanrights.org (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
- ↑ 2.0 2.1 "Kehkashan Basu". Forbes (in ஆங்கிலம்). Archived from the original on 30 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
- ↑ Friedlander, Blaine. "Student prods COP27 to include youth in climate solutions". Cornell Chronicle. Cornell University.
- ↑ 4.0 4.1 Government of Canada, Public Works and Government Services Canada (2022-01-29). "Canada Gazette, Part 1, Volume 156, Number 5: GOVERNMENT HOUSE". www.gazette.gc.ca. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
- ↑ 5.0 5.1 General, Office of the Secretary to the Governor. "Ms. Kehkashan Basu". The Governor General of Canada. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
- ↑ "Kehkashan Basu". World Future Council (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "2016 - Kehkashan Basu (16), UAE". KidsRights Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 16 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ Jingco, Kaitlin (16 November 2017). "Environmental champion Kehkashan Basu brings hope". Canadian Immigrant.
- ↑ "Kehkashan Basu is one of Canada's two young representatives who attended the pre-COP youth event in September and she tells CBC News Network about what she hopes comes from COP26". CBC. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
- ↑ 10.0 10.1 Harris, Teresa. "Top 25 Women of Influence 2018: Kehkashan Basu – Women of Influence" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-06-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
- ↑ "I am Generation Equality: Kehkashan Basu, feminist youth leader and environmentalist from the UAE". UN Women – Arab States. 10 August 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ 12.0 12.1 "Kehkashan Basu - Green Hope Foundation". One Girl (in கனடிய ஆங்கிலம்). 2019-01-12. Archived from the original on 2021-03-30. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
- ↑ 13.0 13.1 "GreenHopeFoundation – The Future belongs to us!" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-01-05. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
- ↑ "Kehkashan Basu". MESIA. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "Board of Trustees | Parliament of the World's Religions". parliamentofreligions.org. Archived from the original on 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
- ↑ Nianias, Helen (15 December 2016). "Dubai's teen eco-warrior: 'It was preordained that I'd take care of mother earth'". The Guardian. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ 17.0 17.1 "Kehkashan Basu's Story | UNCCD". United Nations Convention to Combat Desertification. Archived from the original on 13 August 2020. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ Toronto, Nikki Gill for Streets Of (2019-10-23). "How a Toronto student became an eco-warrior on the world stage". Streets Of Toronto (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-25.
- ↑ Adams, Susan. "From Climate Change To Chronic Truancy, Forbes' 30 Under 30 In Education Are Tackling Some Of The World's Toughest Problems". Forbes (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
- ↑ "'Always dare to dream,' says U of T grad Kehkashan Basu, who started an environmental non-profit at age 12". University of Toronto News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-25.
- ↑ Chin, Amanda (1 January 2021). "Kehkashan Basu: Awards, goals and how it all began with a dead bird". Study International (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
- ↑ "Student prods COP27 to include youth in climate solutions". Cornell Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
- ↑ Rodrigues, Janice (19 October 2021). "Meet the UAE's young eco-warriors fighting for a better tomorrow". The National News. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "Kehkashan Basu – Emirates Woman". Emirates Woman. Archived from the original on 19 January 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "Kehkashan Basu, Founder, Green Hope Foundation". Women in Renewable Energy (in ஆங்கிலம்). Archived from the original on 8 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
- ↑ "Kehkashan Basu". NAAEE (in ஆங்கிலம்). 15 August 2018. Archived from the original on 30 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ Basu, Kehkashan. The Tree of Hope (PDF). பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
- ↑ "Peace Education Day Conference Speakers". Peace Education Day (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
- ↑ Phillips, Vicki (2020-07-14). "#GenGeo: Introducing our spring 2020 National Geographic Young Explorers". National Geographic Education Blog (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
- ↑ "Kehkashan Basu". Forbes (in ஆங்கிலம்). Archived from the original on 2022-01-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.
- ↑ "World Literacy Awards - World Literacy Foundation". worldliteracyfoundation.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-07. Archived from the original on 2022-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.