கெகெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெகெலைட்டு
Kegelite
Kegelite-Siderite-177489.jpg
1 செ.மீ அளவுள்ள கெகெலைட்டு நுண் படிகங்கள்.வலது பக்கம் சிடரைட்டு படிகம்.
பொதுவானாவை
வகைபைல்லோசிலிக்கேட்டுகள்
வேதி வாய்பாடுPb8Al4Si8O20(SO4)2(CO3)4(OH)8
இனங்காணல்
நிறம்நிறமற்றும் வெண்மையும்
படிக இயல்புபோலி அறுகோணத் தகடுகள் கோளப் பொதிவுகளில்
படிக அமைப்புஒற்றைச் சாய்வு
அறியப்படாத இடக்குழு
பிளப்பு{100} சரி பிளவு
விகுவுத் தன்மைவளைந்து கொடுக்கும்
மோவின் அளவுகோல் வலிமைஇல்லை
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
ஒப்படர்த்தி4.5
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்n = 1.81 இணையாக {100}
மேற்கோள்கள்[1][2][3]

கெகெலைட்டு (Kegelite) என்பது Pb8Al4Si8O20(SO4)2(CO3)4(OH)8. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அணைவு சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.

நமீபியா நாட்டிலுள்ள திசுமெப் சுரங்கத்தில் 1975 ஆம் ஆண்டு முதன்முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. திசுமெப் சுரங்கத்தின் இயக்குனராக இருந்த பிரெடரிக் வில்லெம் கெகெல் கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. ஆக்சிசனேற்றம் பெற்ற பல்லுலோகப் படிவுகள் கொண்ட திசுமெப் சுரங்கத்தில் குவார்ட்சு, கலீனா, மிமெடைட்டு, ஏமடைட்டு, லெட்டில்லைட்டு, ஆங்கிலசைட்டு, பிளெய்செரைட்டு, மெலனோடிகைட்டு, அலாமோசைட்டு [1] போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இக்கனிமம் காணப்படுகிறது. தாசுமேனியாவின் சீகான் மாவட்டத்திலும், நார்வே நாட்டின் துனே நகராட்சியிலும் கெகிலைட்டு கிடைப்பதாகக் கூறப்படுகிறது[3].

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கெகெலைட்டு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெகெலைட்டு&oldid=2660563" இருந்து மீள்விக்கப்பட்டது