கெகெனோபிசு ராமசாமீ
| கெகெனோபிசு ராமசாமீ | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Gegeneophis |
| இனம்: | Template:Taxonomy/GegeneophisG. ramaswamii |
| இருசொற் பெயரீடு | |
| Gegeneophis ramaswamii Taylor, 1964 | |
கெகெனோபிசு ராமசாமீ (Gegeneophis ramaswamii, Ramaswami's caecilian,[1]ர forest caecilian[2][3]) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். இது ஒரு வகை சிறுகண் காலிலி ஆகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிக்கு மட்டுமே உரித்தான (அங்கு மட்டுமே காணப்படக்கூடிய) ஒரு உயிரினமாகும்; இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் சிற்றினப் பெயரான ramaswamii என்பது, இந்திய ஊர்வன மற்றும் இருவாழ்வி ஆய்வாளரான எல். எஸ். ராமசுவாமியைச் சிறப்பிக்கும் வகையில் இடப்பட்டுள்ளது.[4]
இந்த இன உயிரியானது ஒப்பீட்டளவில் பெரிய அளவிலான சிறுகண் காலிலி ஆகும்; இதன் மொத்த உடல் நீளம் 182 முதல் 340 மிமீ வரை இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும் காணப்படுகிறது. இதன் கண்கள் வெளியே தெரிவதில்லை. இதன் உணர்நீட்சிகள் நாசித் துவாரங்களுக்குச் சற்றுப் பின்னாலும், அவற்றின் மட்டத்திற்குக் கீழேயும் அமைந்துள்ளன. இதன் உடலின் இறுதிப் பகுதி, உடலின் மற்ற பகுதிகளை விட அகலமாக உள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 David Gower, Mark Wilkinson, Oommen V. Oommen, John Measey, Sushil Dutta, Gopalakrishna Bhatta (2004). "Gegeneophis ramaswamii". IUCN Red List of Threatened Species 2004. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T59553A11962740.en. https://www.iucnredlist.org/species/59553/11962740. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "Gegeneophis ramaswamii Forest Caecilian". AmphibiaWeb. University of California, Berkeley. 2003. Retrieved 11 August 2018.
- ↑ "Taxonomy - Gegeneophis ramaswamii (Forest caecilian)". UniProt. Retrieved 11 August 2018.
- ↑ Beolens, Bo; Watkins, Michael & Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 176. ISBN 978-1-907807-42-8.
- ↑ Bhatta, Gopalakrishna (1998). "A field guide to the caecilians of the Western Ghats, India". Journal of Biosciences 23 (1): 73–85. doi:10.1007/BF02728526. https://archive.org/details/journal-of-biosciences_1998-03_23_1/page/73.