கூழைக்கடா பறவை வரிசைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூழைக்கடா பறவை வரிசைகளில் மொத்தம் 55 இனங்கள் உள்ளன. பெல்லிகன் என்னும் கூழைக்கடா, நீர்காகம், வழுவாக்கி, கான ட், பூபி முதலான பறவைகள் இந்த வரிசையை சார்ந்தவை. இந்த வரிசையை சேர்ந்த பறவைகளை கடல் பறவைகள் என்பதை விட நீர்பறவைகள் என்பதே பொருத்தமானது. பெரிய உடலும் விரலிடை சவ்வு படலமும் கொண்டவை. குட்டையான கால்களையும் நீண்ட இறக்கைகளையும் கொண்டவை. இவைகளினால் நீந்தவும் முடியும் பறக்கவும் முடியும். இவைகள் மீனுண்ணிகள்.

கூழைக்கடா நன்றாக நீந்த கூடியது. முக்குளித்து செல்ல கூடியது. இதன் அலகின் அடிப்புறத்திலிருந்து தொண்டை வரை ஒரு பை போன்ற அமைப்பு உள்ளது. இப்பையின் மூலம் வலை போட்டு அரிப்பது போல் மீன்களை பிடித்து உண்ணும். பறக்கும் போது நீர்ப்பரப்பில் மீன்கள் தென்பட்டால் பாய்ந்து கொத்தி கொண்டு போய் விடும். சதுப்புநில பகுதிகளில் கூடு கட்டும்.

வெள்ளை கூழைக்கடா வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. இது 1.5 மீட்டர் நீளமுடையது. இதன் இறக்கை நுனிகள் கருப்பாக இருக்கும். பறக்கும் போது இவைகள் கழுத்தை 'S 'வடிவில் வைத்து கொள்ளும். நீந்தும் போது கூட்டமாக 'U 'வடிவில் இருக்கும். சாதாரணமாக ஒரு பறவை 3 முட்டைகள் வரை இடும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பறவைகள், என். ஸ்ரீனிவாசன் வித்யா பப்ளிகேஷன், டிசம்பர் 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழைக்கடா_பறவை_வரிசைகள்&oldid=3177166" இலிருந்து மீள்விக்கப்பட்டது