உள்ளடக்கத்துக்குச் செல்

கூலி (2025 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூலி (2025 திரைப்படம்)
கதாபாத்திரச் சுவரொட்டி
இயக்கம்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைலோகேஷ் கனகராஜ்
வசனம்லோகேஷ் கனகராஜ்
சந்துரு அன்பழகன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரிஷ் கங்காதரன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்சன் படங்கள்
வெளியீடு14 ஆகத்து 2025 (2025-08-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு280–400 கோடி[1][2]

கூலி (Coolie) என்பது ஓர் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும்.[a] இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இரசினிகாந்து, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 2023இல் இரசினிகாந்தின் 171ஆவது முன்னணிக் கதாபாத்திரத் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் வழக்கமான மற்றும் ஐமேக்சு வடிவங்களில்[6][7]ஆகத்து 14, 2025 அன்று வெளியானது.[8][9]

கதைச் சுருக்கம்

[தொகு]

விசாகப்பட்டினம் துறைமுகத்தில், கடத்தல்காரன் சைமன் சேவியர் தனது துணை தயாளனுடன் (தயாள்) தங்கம் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்களை கடத்தும் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறார். சைமனின் மகன் அர்ஜுன் தனது குடும்பத்தின் குற்றத் தொழிலை மறுத்து சுங்க அதிகாரியாகிறார். அதே சமயம் சென்னையில் தேவா என்பவர் விடுதி நடத்தி வருகிறார். தனது நண்பர் இராசசேகர் மர்மமான முறையில் இறந்ததை தேவா விசாரிக்கத் தொடங்குகிறார். அப்பொழுது இராசசேகரின் மகள் பிரீத்தி சிக்கலில் மாட்டுகிறார். பிரீத்தியையும் தேவா காப்பாற்ற முயலுகிறார். இராசசேகர் மரண விசாரணையில் பல சிக்கல்கள் ஏற்பட்டு, தேவா எப்படி சமாளிக்கிறார்? தேவாவின் இளம் வாழ்க்கை எப்படி இருந்தது? போன்ற கேள்விகளுக்கு பதிலாய் படம் நகர்கிறது.

கதாபாத்திரங்கள்

[தொகு]

இசை

[தொகு]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "கூலி டிஸ்கோ"  முத்துலிங்கம்அனிருத் ரவிச்சந்திரன் 2:10
2. "சிகிட்டு"  அறிவுடி. ராஜேந்தர், அறிவு, அனிருத் ரவிச்சந்திரன் 3:36
3. "உயிர்நாடி நண்பனே"  விஷ்ணு எடவன்சாய் சிமிருதி, அனிருத் ரவிச்சந்திரன் 3:49
4. "ஐ எம் த டேன்ஜர்"  எய்சன்பர்க்சித்தார்த் பசுரூர், அனிருத் ரவிச்சந்திரன் 3:34
5. "மோனிகா"  விஷ்ணு எடவன், அசல் கோலார்சுபலாட்சினி, அனிருத் ரவிச்சந்திரன், அசல் கோலார்r 3:37
6. "கொக்கி"  அமோக் பாலாஜிசூரஜ் சந்தோஷ், அனிருத் ரவிச்சந்திரன், அமோக் பாலாஜி 3:52
7. "பவர்ஹவுசு"  அறிவுஅனிருத் ரவிச்சந்திரன், அறிவு 3:26
8. "மோப்ஸ்டா"  எய்சன்பர்க், அறிவுஅனிருத் ரவிச்சந்திரன் 1:54
மொத்த நீளம்:
25:58

துணுக்குகள்

[தொகு]

இரசினிகாந்தும் சத்தியராஜும் 38 வருடங்கள் பிறகு இப்படத்தில் இணைந்து நடித்தனர். இதற்கு முன்னர் இவர்கள் கடைசியாக இணைந்து நடித்தது 1986இல் வெளிவந்த மிஸ்டர் பாரத் திரைப்படமாகும்.[11]

விமர்சனங்கள்

[தொகு]

இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், கதை சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘சராசரியான’ படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன" என்று எழுதினர்.[12]

தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "வழக்கமான பழிவாங்கல் படலம் என்றாலும் புதுமையான திரைக்கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளைக் கொண்டு ரசிக்கக்கூடிய படமாக இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கூலி - விறுவிறுப்பு" என்று எழுதினர்.[13]

தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "இது என் படம், இது என் பாணி, இப்படிதான் எடுப்பேன் என்ற பிடிவாதத்தால் ரசிகர்களிடம் திட்டு வாங்குகிறார். முதற்பாதி பெரிய ஏமாற்றம். படத்தின் நீளமும் அதிகம். ரஜினி ரசிகர்கள் விரும்பும் காட்சிகள், பில்டப், பாடல்கள், காமெடி, வணிக ரீதியிலான காட்சிகள் இல்லாதது இன்னும் ஏமாற்றம். கூலி - ரசிகர்களை மட்டுமல்ல, ரஜினியை கூட ஏமாத்திட்டீங்களே லோகேஷ்" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[14]

கல்கி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "தன்னுடைய கடத்தல் உலகில் ரஜினியை நுழைத்து அவருக்காக ஒரு படத்தைத் தர வேண்டும் என்ற முயற்சியில் லோகேஷ் பாதிக் கிணறு மட்டுமே தாண்டி இருக்கிறார். நட்சத்திரப் பட்டாளங்களைச் சேர்க்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் பெரும்பகுதியைக் கதையைச் செம்மைப் படுத்துவதில் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்பதே ஒரு சாதாரணச் சினிமா ரசிகனின் ஆதங்கமாக இருக்கும்" என்று எழுதினர்.[15]

குறிப்புகள்

[தொகு]
  1. பல சான்றுகளில் இருந்து பெறப்பட்டது.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  3. "'Thalaivar 171': Rajinikanth, Lokesh Kanagaraj team up for action-thriller" (in en). The Hindu. 11 September 2023 இம் மூலத்தில் இருந்து 27 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231127125525/https://www.thehindu.com/entertainment/movies/thalaivar-171-rajinikanth-lokesh-kanagaraj-team-up-for-action-thriller/article67294218.ece.
  4. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  5. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  6. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  7. "Lokesh Kanagaraj reveals Rajinikanth's 'Coolie' release plans". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 November 2024 இம் மூலத்தில் இருந்து 7 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20241107081101/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/lokesh-kanagaraj-reveals-rajinikanths-coolie-release-plans/articleshow/115009604.cms.
  8. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  9. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  10. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/coolie-opinion-rajinikanth-lokesh-kanagaraj-kamal-haasan-2771532-2025-08-15
  11. "Sathyaraj denies having a feud with Rajinikanth: 'I turned down Sivaji, Enthiran because…'". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-06-05. Retrieved 2025-08-15.
  12. "'கூலி' விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் 'ஆவரேஜ்' ட்ரீட்மென்ட் எப்படி?". Hindu Tamil Thisai. 2025-08-14. Retrieved 2025-08-14.
  13. தினத்தந்தி (2025-08-14). "அரங்கம் அதிர்கிறதா..? 'கூலி' திரைப்படம் எப்படி இருக்கிறது..? திரை விமர்சனம்". www.dailythanthi.com. Retrieved 2025-08-14.
  14. "கூலி - விமர்சனம் {2.5/5} : கூலி - ரசிகர்களை மட்டுமல்ல, ரஜினியை கூட ஏமாத்திட்டீங்களே லோகேஷ் - Coolie". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-08-15.
  15. நா.மதுசூதனன் (2025-08-14). "விமர்சனம்: கூலி - வசூல் சரி... எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?". Kalki Online. Retrieved 2025-08-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூலி_(2025_திரைப்படம்)&oldid=4638667" இலிருந்து மீள்விக்கப்பட்டது