கூலிக்கு மாரடித்தல்

கூலிக்கு மாரடித்தல் அல்லது தொழில்முறை துக்கம் கொள்பவர்கள் (Professional mourning) என்பது துக்க நிகழ்வில் கூலிக்காக வந்து துக்கம் அனுசரிப்பது போல் நடிப்பவர் ஆவர். இவர்களை பொதுவாக உண்மையாக துக்கப்படுபவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஒரு தொழிலாக இது எகிப்து, சீனம், நடுநிலக் கடல், அண்மைக் கிழக்கு பண்பாடுகளிலிருந்து உருவாகியது. கூலிக்கு மாரடிப்பவர்கள் வைலர்கள், மோயிராலஜிஸ்டுகள், என்றும் அழைக்கப்படுகின்றனர். புலம்புவதற்கு அல்லது புகழ்பாடி ஒப்பாரி வைப்பதற்கு, துக்க வீட்டுக் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க, இறுதிச் சடங்கு நிகழ்வை மேம்படுத்துவதற்கு ஊதியம் பெறுகிறார்களாக இவர்கள் உள்ளனர். பைபிள் [1] மற்றும் பிற சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பிரிவினர், கிமுவின் ஆரம்ப நூற்றாண்டுகளின் உகாரிடிக் காவியங்கள் [2] முதல் நவீன கவிதைகள் வரை இலக்கியங்களில் பரவலாகப் பேசப்பட்டு ஆராயப்படுகின்றனர்.
வரலாறு
[தொகு]கூலிக்கு மாரடிக்கும் செயலைச் செய்ய பணியமர்த்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் பெண்களே ஆவர். ஆண்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காரணமாக அவர்கள் இதற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர்.[3] துக்க நிகழ்வு என்பது சில நேரங்களில் பெண்களுக்குக் கிடைக்கும் ஒரு சில ஊதியத் தொழில்களில் ஒன்றாகும். [3] ஒரு துக்க நகழ்வில் துக்கம் அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கைக் கூடுதலாக இருப்பது செல்வம், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு இறுதி நிகழ்வைப் பின் தொடர்ந்து எவ்வளவு அதிகமாகவர்கள் வருகிறார்களோ, அந்த அளவுக்கு இறந்தவர் சமூகத்தில் மதிக்கப்படுகிறார்.
எகிப்து
[தொகு]
பண்டைய எகிப்தில், துக்கம் அனுசரிப்பவர்கள் துக்கத்தைக் கூடுதலாகக் காண்பிப்பார்கள். அப்போது முடியைக் கலைத்துப் போடுதல், உரத்து அழுதல், மாரில் அடித்துக் கொள்ளுதல், உடலில் மண்ணைப் பூசிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்வர். [4] இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பிணத்தைப் பின்தொடரும் மக்கள் கூட்டத்தை கல்லறைகள் மற்றும் பிரமிடுகளில் சித்தரித்து செதுக்கபட்டுள்ளன.
சீனா
[தொகு]756 முதல் சீன இறுதிச் சடங்குகளில் தொழில்முறை துக்கப்படுபவர்கள் தொடர்ந்து கலந்து கொள்கிறார்கள். [5] இறுதிச் சடங்கு ஊர்வலங்களின் போது நிகழும் நாடக நிகழ்ச்சிகளிலிருந்து தொழில்முறை துக்கப் பாரம்பரியம் உருவானது. [5] மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இறுதிச் சடங்குகளில் இசை நிகழ்ச்சிகள் இருந்தன. அத்தகைய ஒரு காட்சியை அறிஞர் ஜீஹீ ஹாங் விவரித்துள்ளார்.
இந்தியா
[தொகு]இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக மேற்கு இந்திய மாநிலமான இராசத்தானில் ருடாலி என்று அழைக்கப்படும் கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் காணப்படுகின்றனர். [6]
ஐரோப்பா
[தொகு]
உரோமானிய வரலாற்றில், இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் துக்கப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டனர். மேலும் அவர்கள் பெரும்பாலும் நாடக நிகழ்ச்சியாக கருதப்பட்டனர். ஆரம்பகால வரலாற்றில், பிரீஃபிசியா என்று அழைக்கப்படும் கூலிக்கு மாரடிப்பவர்கள், இறந்தவர்களுக்காகப் பாடுவதற்காக இறுதி ஊர்வலத்தில் இசைக்கலைஞர்களைப் பின்தொடர்ந்து செல்வர். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mourning: Hired Mourners". Bible Hub. Archived from the original on 2016-10-25. Retrieved 2016-10-23.
- ↑ Angi, Betty Jean (October 1971). THE UGARITIC CULT OF THE DEAD A STUDY OF SOME BELIEFS AND PRACTICES THAT PERTAIN TO THE UGARITIANS' TREATMENT OF THE DEAD. p. 30/37. https://macsphere.mcmaster.ca/bitstream/11375/10709/1/fulltext.pdf. பார்த்த நாள்: 16 May 2024.
- ↑ 3.0 3.1 Arbel, Vita (2012). Forming Femininity in Antiquity. Oxford University Press, USA. ISBN 978-0-19-983777-9.
- ↑ Tyldesley, Joyce (March 30, 1995). Daughters of Isis:Women of Ancient Egypt. Penguin Books. p. 132. ISBN 9780141949819.
- ↑ 5.0 5.1 Hong, Jeehee (2016). Theater Of The Dead. University of Hawaii Press.
- ↑ Nower, Tahseen (30 August 2023). "Rudaalis: The tear sellers of Rajasthan". The Financial Express. https://thefinancialexpress.com.bd/lifestyle/culture/rudaalis-the-tear-sellers-of-rajasthan.
- ↑ Douglas, Lawrence (2017). Law and Mourning. University of Massachusetts Press. pp. 59–93. ISBN 978-1-61376-530-2.