கூர்வாய் அழகுத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூர்வாய் அழகுத் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: தவளை
குடும்பம்: மைக்ரோகையலிடே
பேரினம்: மைக்ரோகைலா
இனம்: மை. ஓர்னாடா
இருசொற் பெயரீடு
மைக்ரோகைலா ஓர்னாடா
தும்மெரில் & பைப்ரோன், 1841[2]

கூர்வாய் அழகுத் தவளை[3] (Microhyla ornata பொதுவாக the ornate narrow-mouthed frog, ornate narrow-mouthed toad, or ornamented pygmy frog, என்றும் அறியப்படுகிறது ). என்பது தெற்காசியாவில் காணப்படும் ஒரு வகை கூர்வாய்த் தவளை ஆகும். இந்த நீர்நில வாழ்வனமானது காஷ்மீர், நேபாளம், தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலங்கை, வங்கதேசம் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது. [4] இது முன்னர் மைக்ரோஹைலா ஃபிசிப்சை ஒத்ததாக கருதப்பட்டது; எனவே, இதன் வேறு பொதுவான பெயர்கள் வேறு எந்தவொரு இனத்தையும் குறிக்கலாம். [5]

விளக்கம்[தொகு]

ஜல்பைகுரி (பெருபாரி) பாலாஷ் பந்தில் காணப்பட்ட ஒரு தவளை

மைக்ரோஹைலா பேரினத் தவளைகள் சிறியவை. பொதுவாக இவற்றின் முதுகுப் புறப் பகுதியில் உள்ள அம்பு வடிவ அடையாளத்தால் இவற்றை அடையாளம் காணலாம். இவை பொதுவாக அடர் பழுப்பு நிற தோல்திட்டுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த இனமானது சிறிய தலை கொண்டதாக, பற்கள் அற்றதாகவும், தெளிவான செவிப்பகுதி இல்லாததாகவும் இருக்கும். விரல் நுனிகளில் கரண்டி வடிவமானவையாகவும் மற்றும் விரல்களுக்கு இடையில் சிறிய வலைப் பின்னல் உள்ளது. ஆண் தவளைகளுக்கு கலவித்திண்டு இல்லை. பின்புறத்தில் உள்ள தோல் மென்மையானது, என்றாலும் அதில் சில பொக்குகள் உள்ளன. ஆண் தவளைகள் மூக்கு முதல் ஆசனவாய்வரை சுமார் 24 mm (0.9 அங்) நீளமுள்ளவையாகவும், பெண் தவளைகள் சுமார் 28 mm (1.1 அங்) நீளமுள்ளவையாகவும் உள்ளன. [6]

பரவல் மற்றும் வாழ்விடம்[தொகு]

கூர்வாய் அழகுத் தவளை வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாக்கிதான், இலங்கை ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது. வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல புல்வெளிகள், சவன்னாக்கள் மற்றும் புதர்நிலங்கள் முதல் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஈரமான அகல காடுகள், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல உலர் அகன்ற இலைக் காடுகள் மற்றும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஊசியிலைக் காடுகள் வரையிலான வாழிடங்களில் இது புல் மற்றும் இலைக் குப்பைகளில் காணப்படுகிறது . [7]

சில வாழிடங்களில், இந்த தவளை யானை லத்திகளை ( சாணம்) தன் இருப்பிடமாக கொள்கின்றன . [8]

உயிரியல்[தொகு]

கூர்வாய் அழகுத் தவளை காடுகளின் தரையில் இலைக் குப்பைகளில் பாதி மறைந்து வாழ்கிறது. இது முதன்மையாக இரவாடி விலங்கு என்றாலும் இது மழைக்காலத்திலும் பகலிலும் நடமாடக்கூடியது. இது மழைக்காலத்தில் உருவாகும் குளம், குட்டைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. [7]

நிலைமை[தொகு]

இந்த தவளை பரந்த பரப்பளவில் வாழ்விடத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கையானது நிலையானதாகத் தோன்றுகிறது. எனவே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்று வகைப்படுத்தி உள்ளது. ஏனெனில் இதன் எண்ணிக்கை விகிதத்தில் வீழ்ச்சி ஏதேனும் இருந்தால், அதை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனம் என்ற பிரிவில் பட்டியலிட நியாயமான காரணங்கள் இல்லை என்று கருதுகிறது. இது காணப்படக்கூடிய பகுதிகளில் பொதுவாக பல்வேறு வாழ்விட வகைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியது. இந்த இனத்திற்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dutta, S.; Kumar Shrestha, T.; Manamendra-Arachchi, K.; Khan, M.S.; Roy, D. (2008). "Microhyla ornata". IUCN Red List of Threatened Species 2008: e.T57886A11686884. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T57886A11686884.en. https://www.iucnredlist.org/species/57886/11686884. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Duméril, A. H. and G. Bibron, 1841. Erpetologie generale ou Histoire Naturelle complete des reptiles. Vol. 8. , Paris.
  3. உயிரினப் பன்மை: மறைந்துவரும் மழைக்காலக் கச்சேரிகள், கட்டுரை, சு.வே. கணேஷ்வர், இந்து தமிழ், 2019 திசம்பர் 21
  4. Frost, Darrel R. (2013). "Microhyla ornata (Duméril and Bibron, 1841)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.
  5. Frost, Darrel R. (2014). "Microhyla fissipes Boulenger, 1884". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
  6. Ambika Sopory (2002-05-28). "Microhyla ornata". AmphibiaWeb. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.
  7. 7.0 7.1 7.2 Sushil Dutta; Tej Kumar Shrestha; Kelum Manamendra-Arachchi; Muhammad Sharif Khan; Debjani Roy (2004). "Microhyla ornata". IUCN Red List of Threatened Species. IUCN. 2004. Retrieved 2013-06-11.
  8. Campos-Arceiz, A (2009). "Shit Happens (to be Useful)! Use of Elephant Dung as Habitat by Amphibians". Biotropica 41 (4): 406–407. doi:10.1111/j.1744-7429.2009.00525.x. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்வாய்_அழகுத்_தவளை&oldid=3458740" இலிருந்து மீள்விக்கப்பட்டது