உள்ளடக்கத்துக்குச் செல்

கூம்புவடிவத் தூய்மையாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூம்புவடிவத் தூய்மையாக்கி ( Conical refiner) என்பது காகிதம் தயாரிக்கும் செயல்முறையில் காகிதக்கூழை தூய்மையாக்கப் பயன்படும் ஓர் இயந்திரமாகும். அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் யோசப் யோர்தான் இவ்வியந்தரத்தைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வியந்திரம் யோர்தான் தூய்மையாக்கி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இத்தூய்மையாக்கி இயந்திரத்திற்கான காப்புரிமை 1858 ஆம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது[1]

உள்ளே சுற்றிலும் உலோகப் பட்டைகள் பதிக்கப்பட்ட கொள்கலன் உள்ள கோபுரமே கூம்புவடிவத் தூய்மையாக்கி எனப்படும். தூய்மையாக்கப்பட வேண்டிய பொருள் உயர் அழுத்த விகிதத்தில் கூம்புவடிவத் தூய்மையாக்கும் கோபுரத்திற்குள் செலுத்தப்படுகிறது. இப்பொருள் தேய்ப்பு விளைவை எட்டுவதற்காக, உலோகப் பட்டைக்ளிட விசையுடன் இயந்திரத்திற்குள் உலோகப் பட்டைகளிடம் செலுத்தப்படுகிறது. கோபுரத்தின் எதிர்ப்பக்கம் முடிவான விளைபொருள் வெளியேற்றப்ப்படுகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Biermann, C (1996). Handbook of Pulping and Papermaking. Academic Press. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080533681.
  2. Clapperton, R. H. (2014). The Paper-making Machine: Its Invention, Evolution, and Development. Elsevier. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483279602.