கூப்பன்

சந்தைப்படுத்தலில், வெட்டுச் சீட்டு அல்லது சலுகைச் சீட்டு (coupon, கூப்பன்) என்பது ஒரு பொருளை வாங்கும் போது நிதித் தள்ளுபடி அல்லது தள்ளுபடியைப் பெறப் பயன்படுத்தக்கூடிய ஒரு சீட்டு அல்லது ஆவணமாகும்.
வழக்கமாக, சலுகைச் சீட்டுகள் நுகர்வோர் பொதி செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்களால்[1] அல்லது சில்லறை விற்பனையாளர்களால், விற்பனை ஊக்குவிப்புகளின் ஒரு பகுதியாக சில்லறை விற்பனைக் கடைகளில் பயன்படுத்த வழங்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் அஞ்சல், கூப்பன் உறைகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இணையம் (சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் செய்திமடல்), சில்லறை விற்பனையாளரிடமிருந்து நேரடியாக, அல்லது கைபேசிகள் மூலம் பரவலாக விநியோகிக்கப்படுகின்றன. விலைப் போட்டி அதிகமாக உள்ள பிராந்திய சந்தைகளைத் தேர்ந்தெடுத்தும் கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான கூப்பன்களுக்கு காலாவதி தேதி உண்டு.[2]
சலுகைச் சீட்டுகள் கிடைக்கும் இடங்கள்
[தொகு]- கடை
- விளம்பரங்கள்
- இதழ்கள், பத்திரிகைகள்
- பொருள் வெளியுறையில்
- இணையம்
மேற்கோள்கL
[தொகு]- ↑ Randall Stross (December 25, 2010). "Someday, Store Coupons May Tap You on the Shoulder". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2010/12/26/business/26digi.html.
- ↑ Reed, Charlie. "AAFES, DeCA still accepting expired coupons". Stars and Stripes. Retrieved 1 July 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் கூப்பன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.