கூன் (செய்யுள் உறுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யுளில் வரும் அடிகளில் சில கூனன் போல் கூன் விழுந்து வரும். தொல்காப்பியம் இந்தச் செய்யுள் உறுப்புக்கு இலக்கணம் கூறுகிறது. தனி அசையோ, தனிச் சீரோ பாடலில் தனி அடியாக நிற்பது கூன் என்னும் கூனடி.

தொல்காப்பியம்[தொகு]

ஈரடியோ, மூவடியோ கொண்ட வஞ்சிப்பாவில் நேரசையோ, நிரையசையோ கூனடியாக வரும். [1] ஆசிரியப்பாவில் தனிச்சீர் கூனடியாக வரும்.

அவரே

கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியல் காடு இறந்தோரே [2] [3]

இதில் ‘அவரே’ என்பது கூனடி.

யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற யாப்பிலக்கண நூல்கள் இதனை வேறுபடுத்திக் காட்டவில்லை.[4]

மேற்கோள்[தொகு]

  1. அசை கூன் ஆகும் அவ்வயினான. (செய்யுளியல் 46)
  2. குறுந்தொகை 216
  3. சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. (செய்யுளியல் 47)
  4. பொழிலே
    இரவோர் அன்ன இருளிற்று ஆகியும்
    நிலவோர் அன்ன வெண்மணல் ஒழுகியும்

    என்று தொடங்கி வரும் பாடலை யாப்பருங்கலம் மேற்கோள் காட்டுகிறது. இதில் [பொழிலே] என்னும் சொல் தொல்காப்பிய நெறியில் சொல்லப்போனால், கூனாக வருவதைக் காணலாம். இதனை ‘ஏந்திசை அகவல் ஓசை’ என்று குறிப்பிட்டு வெறுமனே விட்டுவிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூன்_(செய்யுள்_உறுப்பு)&oldid=3445555" இலிருந்து மீள்விக்கப்பட்டது