கூனித்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூனித்தீவு என்பது இலங்கையின் திருகோணமைல மாவட்டத்தின் கிழக்கே மூதூர் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். இது விவசாய மற்றும் விசுவகுல மக்களைக் கணிசமாகக் கொண்டது.

பெயர்க்காரணம்[தொகு]

இக்கிராமத்தின் பெயர் அமைவதற்கு பின்வரும் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. இங்கு அதிகமாக அக்காலத்தில் கூர்நெல்(சிறிய வகை நெல்) பயிரிடப்பட்டு வந்தமையினால் "கூர்நெல்தீவு" என அழைக்கப்பட்டு பின் அது மருவி இன்று"கூனித்தீவு" என அழைக்கப்பட்டு வருகின்றது எனவும், இக் கிராமத்தின் நிலத்திணிவானது வளைந்த வடிவில் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

இங்குள்ள வில்லுக்குளம் என்ற குளம் வில் போன்று வழைந்து பரந்து காணப்படுவதோடு அதன் வழைந்த நிலப்பரப்பினுளேயே கூனித்தீவு அழகாக இடம்பிடித்திருப்பது இக்கிராமத்தின் சிறப்பாகும். வில்லுக்குளம் வெள்ளைத்தாமரைத் தடாகமாகக் காட்சியளிப்பதோடு மீன் வளத்தையும் கொண்டு விளங்குகிறது.

ஊரில் பிறந்து கல்வியால் உயர்ந்தவர்கள்

திரு.தா.கௌரிசங்கர் (சத்திர சிகிச்சை நிபுணர்)

திரு.சு.சுதர்சன் (வைத்தியர்)

திரு.யோ.பிரசாத் (வைத்தியர்)

கோயில்கள்[தொகு]

  • பிள்ளையார் கோயில்
  • படபத்திரகாளி கோயில்
  • வைரவர் கோயில்
  • மத்தாளிமைல முருகன் கோயில்

குளங்கள்[தொகு]

  • வில்லுக்குளம்
  • குயவன் குளம்
  • பெரியகுளம்
  • புலிகுத்திய குளம்
  • மொட்டையாண்டிக் குளம்

பாடசாலைகள்[தொகு]

  • தி/நாவலர் வித்தியாலயம்
  • தி/பாரதி வித்தியாலயம்

கிராமசேவகர் பிரிவு[தொகு]

  • 8ம் வட்டாரம்
  • 9ம் வட்டாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூனித்தீவு&oldid=3683644" இருந்து மீள்விக்கப்பட்டது