கூத்தலூர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூத்தலூர் மாதா ஆலயம்,கூத்தலூர்

கூத்தலூர் கிராமம், சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் மைந்துள்ளது. இக்கிராமம், காரைக்குடியில் இருந்து 10கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இவ்வூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் மிகச் சிறப்பு வாய்ந்தது.

கிராமச் சிறப்புகள்[தொகு]

இக்கிராமம், சின்னக் கொழும்பு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இங்குள்ள பலரும் கொழும்பு, பர்மா போன்ற நாடுகளில் தொழில் மேற்கொண்டுள்ளனர்.

மக்கள்[தொகு]

இங்கு, 600குடும்பத்தினரும், 1000மக்களும் உள்ளனர். பல சமயங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைச் சார்ந்த்வர்கள்.

ஆலயச் சிறப்புகள்[தொகு]

[1]

இங்குள்ள ஆலயம், பிரெஞ்சு அரசால் 1860-ல்கட்டப்பட்டது. ஆலயக் கட்டிடம் சுட்டச்சுண்ணாம்பு, செங்கல், முட்டையின் வெள்ளைக் கரு கொண்டுக் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள மாதா சிலை ஜெர்மன் பெண் ஒருவரால் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் கட்டப்பட்டு 150 வருடங்கள் ஆனதால், விழாச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டுள்ளது. செபஸ்தியாருக்கும், அன்னை மரியாளுக்கும் தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "kuthalur parish".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தலூர்_ஆலயம்&oldid=2724513" இருந்து மீள்விக்கப்பட்டது