உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டு பேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 கூட்டு பேரம் என்பது வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியம், பணி நிலைமைகள், சலுகைகள், தொழிலாளர்களின் இழப்பீடு, தொழிலாளர்களுக்கான உரிமைகள் முதலியவற்றில் உடன்பாடு கண்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதனை நோக்கமாகக் கொண்டு முதலாளிகளுக்கும் ஊழியர்களின் குழுவுக்கும் இடையில் நடைபெறும் ஒரு பேச்சுவார்த்தை செயல்முறையாகும். பொதுவாக, ஊழியர்கள் ஆதரவு பெற்ற தொழிற்சங்கச் சார்பாளர்கள், ஊழியர்களின் நலன்களை முன்வைப்பர். இந்தப் பேச்சுவார்த்தைளையடுத்து ஒரு கூட்டு ஒப்பந்தம் எட்டப்படும். இது ஒரு முதலாளிக்கும் தொழிற்சங்கங்கத்திற்கும் இடையிலான தொழிலாளர் ஒப்பந்தமாக கருதப்படும். பொதுவாக, இத்தகைய ஒப்பந்தங்கள் ஊதிய அளவுகள், வேலை நேரம், பயிற்சி, நலமும் பாதுகாப்பும், கூடுதல் நேரம், குறைதீர்ப்பு வழிமுறைகள், பணியிட, நிறுவன அலுவல்களில் பங்கேற்பதற்கான உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை வரையறுக்கும்.[1] இத்தகைய ஒப்பந்தங்களில் சில வேளை, தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் அல்லது கூடுதல் பணி உறுதி கிடைக்கும் பொருட்டு, அவர்கள் உற்பத்தித் திறனைப் பெருக்கும் வகையில் வேலை நடைமுறைகளில் மாறுதல்களுக்கும் உடன்படுவதும் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BLS Information". Glossary. U.S. Bureau of Labor Statistics Division of Information Services. February 28, 2008. Retrieved 2009-05-05.

 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_பேரம்&oldid=4229468" இலிருந்து மீள்விக்கப்பட்டது