கூட்டுவிளைபொருள் தூய்மையாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டுவிளைபொருள் தூய்மையாக்கல் (Adduct purification) என்பது எளிய கரிம உலோகச் சேர்மங்களை மீத்தூய நிலையில் தயாரிக்கும் நுட்பமாகும். பொதுவாக இவை நிலைப்புத் தன்மை இல்லாமலும் கையாள்வதற்கு கடினமானவையாகவும் காணப்படுகின்றன. ஒரு நிலையான கூட்டுவிளைபொருளை இலூயிக் அமிலத்துடன் சேர்த்து தூய்மைப்படுத்தும் பொழுது உண்டாகும் விளைபொருளை வெப்பப் பகுப்புக்கு உட்படுத்தி தேவையான தூய கூட்டுவிளைபொருளைத் தயாரிக்கலாம்.

இந்தத் துறையில் முக்கியக் காப்புரிமைகளுக்கு உரிமையாளராக எபிகெம் நிறுவனம் இருக்கிறது. தூய்மை படுத்தப்பட்ட கூட்டுவிளைபொருட்களை அடையாளப்படுத்த எபிதூய்மை என்ற வர்த்தக குறியீட்டை அந்நிறுவனம் பயன்படுத்துகிறது. லிவர்பூல் பல்கலைக்கழகம் சார்ந்தவரான பேராசிரியர் அந்தோனி யோன்சு இம்முறையினை தொடங்கி வைத்ததுடன் பல முக்கியமான தாள்களை உருவாக்குனராகவும் விளங்குகிறார்.

இலூயிக் அமிலத் தேர்வு மற்றும் வினை ஊடகம் இங்கு முக்கியமாக கருதப்படுகிறது. இம்முறையில் தூய்மைப்படுத்தும் அனைத்து கரிம உலோகச் சேர்மங்களும் காற்று மற்றும் நீரால் எளிதில் பாதிக்கப்படுபவையாகும். தொடக்க வினைகள் ஈதரில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இம்முறையில் ஆக்சிசன் மாசுக்கள் உருவாகின்றன. இதனால் மூன்றாம்நிலை அமீன்கள் அல்லது நைட்ரசன் பதிலீடு செய்யப்பட்ட பொது ஈதர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]