கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
துறை மேலோட்டம்
அமைப்பு1911
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
பொறுப்பான அமைச்சர்கள்
அமைப்பு தலைமை
  • கே.கோபால், அரசு முதன்மைச் செயலர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு
வலைத்தளம்Co-operation, Food and Consumer Protection Department

தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (Department of Co-operation, Food and Consumer Protection (Tamil Nadu)) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும்.

வரலாறு[தொகு]

இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. முதல் கூட்டுறவுக் கடன் சங்கமானது திரூரில் தொடங்கப்பட்டது. நுகர்வோர் கூட்டுறவுச் சங்கமானது திருவல்லிக்கேணியில் 1904-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தினை முன்மாதிரியாகக் கொண்டு கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்கின.[1]

நிர்வாகம்[தொகு]

கீழ்கண்ட அலுவலர்களால் கூட்டுறவுத் துறை நிர்வகிக்கப்படுகிறது.

  • தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் மாநில பதிவாளர் அலுவலகம், சென்னை
  • மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் அலுவலகம் (மாவட்ட வாரியாக)
  • சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் அலுவலகம் (கோட்ட வாரியாக)
  • கூட்டுறவுச் சங்கங்களின் சார்பதிவாளர்கள்
  • கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்கள்
  • கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்கள்

பணிகள்[தொகு]

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் கீழ்க்கண்ட பணிகளை செய்துவருகின்றன.

  • கடன் வழங்குதல்
  • விவசாய விளைபொருட்கள் விற்பனை மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்துதல்
  • வேளாண்மை இடுபொருள், நுகர்பொருள் ஆகியவற்றை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகின்றன.[2]

மாநில கூட்டுறவுச் சங்கங்கள்[தொகு]

மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள்[தொகு]

  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
  • மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டகசாலைகள்
  • கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்
  • மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள்
  • மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்

தொடக்கநிலை கூட்டுறவுச் சங்கங்கள்[தொகு]

  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்
  • நகர கூட்டுறவு வங்கிகள்
  • நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்
  • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள்
  • தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்
  • பெரும்பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்
  • பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள்
  • தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள்
  • மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள்
  • பால்வள கூட்டுறவுச் சங்கங்கள்
  • வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்கள்
  • நெசவாளர்கள் கைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள்
  • மீனவர்கள் கூட்டுறவுச் சங்கங்கள்
  • தொழில் கூட்டுறவுச் சங்கங்கள்

சட்டம் & விதிகள்[தொகு]

  • தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1983[3]
  • தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள், 1988 [4]
  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986[5]
  • தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள், 1988 [6]

சான்றுகள்[தொகு]

  1. "co operation history i=of Tamil Nadu". www.tn.gov.in/rti/. http://www.tn.gov.in/policynotes/pdf/cooperation.pdf. பார்த்த நாள்: 2012-11-07. 
  2. "functions of the CO,F & CP Department". www.tn.gov.in/rti/. http://www.tn.gov.in/rti/proactive/cfcp/manual_cfcp.pdf. பார்த்த நாள்: 2012-11-07. 
  3. THE TAMIL NADU CO-OPERATIVE SOCIETIES ACT, 1983
  4. Tamil Nadu Cooperative Societies Rules, 1988.
  5. Consumer Protection Act of India, 1986
  6. TAMIIL NADU CONSUMER PROTECTION RULES. 1988

வெளி இணைப்புகள்[தொகு]