உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டுப் பொறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டுப் பொறுப்பு அல்லது கூட்டு குற்ற உணர்வு (collective responsibility or collective guilt) என்பது குழுக்கள், நிறுவனங்கள் அல்லது சமூகங்கள் மற்றும் அமைப்புகளின் சமூகப் பொறுப்பைக் குறிக்கிறது.[1][2]எடுத்துக்காட்டாகப் பள்ளி விடுதியில் யார் என்று தெரியாத மாணவனின் தவறான செயலுக்கு ஒட்டு மொத்த விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் கூட்டுத் தண்டனை வடிவத்தில் கூட்டுப் பொறுப்பு பார்க்கப்படுகிறது. இது போன்று இராணுவம், காவல்துறை முகாம்கள், சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்றவற்றில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையின் பகுதியான கூட்டுத் தண்டனை வடிவத்தில் கூட்டுப் பொறுப்பு பார்க்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக, கூட்டுத் தண்டனை என்பது நிறுவனம் அல்லது உள்ளுர் சமூகத்தின் சர்வாதிகாரப் போக்குகளின் அறிகுறியாகும்.[3][4]

அறிஞர் ஏ. டிர்க் மோசசின் கூற்றுப்படி, இனப்படுகொலையை ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பினால் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என்கிறார்.[5]

வணிகத்தில்

[தொகு]

பெருநிறுவன சமூகப் பொறுப்பு[6] (CSR) என்பது நிறுவனங்கள் தங்கள் வணிக செயல்பாடுகளுக்கு அப்பால், சமூகத்தின் நல்வாழ்வுக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் கூட்டுப் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் ஒரு உத்தியாகும். வணிகங்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்காமல், சமூகத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.[7]

பிரபல கலாசாரத்தில்

[தொகு]

கூட்டுப் பொறுப்பு என்ற கருத்து இலக்கியத்தில் உள்ளது. குறிப்பாக சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜின் "தி ரைம் ஆஃப் தி ஏன்சியன்ட் மரைனர்" என்ற கவிதையில், ஒரு கப்பல் குழு உறுப்பினர் ஒரு அல்பட்ரோசு பறவையை கொன்றதை அங்கீகரித்த பிறகு தாகத்தால் இறந்த ஒரு கப்பல் குழுவினரின் கதையைச் சொல்கிறது.

1959ல் வெளியிடப்பட்ட பென்-ஹர் திரைப்படம் மற்றும் 1983ல் சிறை குற்ற நாடகமான பேட் பாய்ஸ் ஆகியவை கூட்டுப் பொறுப்பு மற்றும் கூட்டுத் தண்டனையை சித்தரிக்கின்றது. ஜே. பி. பிரீஸ்ட்லியின் ஆன் இன்ஸ்பெக்டர் கால்ஸ் எனும் நாடகத்தில், விசாரணை செயல்முறை முழுவதும் கூட்டுப் பொறுப்பின் கருப்பொருளைக் கொண்டுள்ளது.[8]

அரசியலில்

[தொகு]

அரசின் கொள்கை முடிவுகளுக்கு அமைச்சரவைக் குழுவே கூட்டுப் பொறுப்பானவை. பாராளுமன்ற ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட சில நாடுகளில், அமைச்சரவைக் குழுவின் உறுப்பினர்களும் அரசாங்க முடிவுகளுடன் உடன்படவில்லை என்றாலும், அவற்றைப் பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும் என்ற ஒரு மரபு உள்ளது. கருத்து வேறுபாடு அல்லது பகிரங்கமாக எதிர்க்க விரும்பும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்.

கூட்டுப் பொறுப்பின் விளைவாக, நாடாளுமன்றத்தில் அரசின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால் முழு அரசாங்க அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்.

சட்டத்தில்

[தொகு]

சட்டப்படியான கடமையைப் பொறுத்தவரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொறுப்பேற்க வேண்டியிருந்தால், அவர்கள் கூட்டாகவும் மற்றும் தனித்தனியாகவும் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்புகூட்டுப் பொறுப்பின் அளவு அதிகார வரம்புகளுக்குள் மாறுபடும்.

சமயத்தில்

[தொகு]

இயேசுவின் மரணத்திற்கு யூதர்களைக் குறை கூறும் நடைமுறை, கூட்டுப் பொறுப்பின் மிக நீண்ட கால எடுத்துக்காட்டு. இப்பழி இயேசுவின் கால யூதர்கள் மீது மட்டுமின்றி, அடுத்தடுத்த தலைமுறை யூதர்கள் மீதும் சுமத்தப்பட்டது. இந்தப் பழக்கம் மத்தேயு நற்செய்தி 27:25-66 மற்றும் விவிலியத்தின் புதிய சர்வதேச பதிப்பு (New International Version) 25-ல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது:

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Collective Responsibility in Stanford Encyclopedia of Philosophy
  2. Gregory Mellema (1997). Collective Responsibility. Rodopi. ISBN 90-420-0311-1.
  3. "Personality traits predict authoritarian tendencies, study finds". PsyPost (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-09-29. Retrieved 2019-03-06.
  4. Alexopoulos, Golfo (January 2008). "Stalin and the Politics of Kinship: Practices of Collective Punishment, 1920s–1940s". Comparative Studies in Society and History 50: 91–117. doi:10.1017/S0010417508000066. https://archive.org/details/sim_comparative-studies-in-society-and-history_2008-01_50_1/page/90.
  5. Anderson, Margaret Lavinia; Reynolds, Michael; Kieser, Hans-Lukas; Balakian, Peter; Moses, A. Dirk; Akçam, Taner (2013). "Taner Akçam, The Young Turks' crime against humanity: the Armenian genocide and ethnic cleansing in the Ottoman Empire (Princeton, NJ: Princeton University Press, 2012)". Journal of Genocide Research 15 (4): 463–509. doi:10.1080/14623528.2013.856095. "This is a telling slip; Lewy is talking about 'the Armenians' as if the defenceless women and children who comprised the deportation columns were vicariously responsible for Armenian rebels in other parts of the country. The collective guilt accusation is unacceptable in scholarship, let alone in normal discourse and is, I think, one of the key ingredients in genocidal thinking. It fails to distinguish between combatants and non-combatants, on which international humanitarian law has been insisting for over a hundred years now.".
  6. நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு
  7. "Building a culture of Responsibility in CEP Plant Timișoara – Continental" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2015-05-27. Retrieved 2019-03-06.
  8. Christie, William (13 October 2006). Samuel Taylor Coleridge: A Literary Life (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Springer. doi:10.1007/978-0-230-62785-7 (inactive 1 November 2024). ISBN 978-0-230-62785-7.{{cite book}}: CS1 maint: DOI inactive as of நவம்பர் 2024 (link)[page needed]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுப்_பொறுப்பு&oldid=4593545" இலிருந்து மீள்விக்கப்பட்டது