கூட்டுத் தண்டனை
கூட்டுத் தண்டனை (Collective punishment) என்பது ஒரு தனிநபர் அல்லது நபர்கள் அல்லது குழுவினர் குற்றம் செய்தமைக்கு, குற்றம் செய்தவர்கள் சமூகத்திற்கு அல்லது குழுவினருக்கு எதிராக விதிக்கப்படும் தண்டனை ஆகும். குற்றம் செய்தவர்கள் ஒரு இனமாகவோ அல்லது அரசியல் குழுவாகவோ அல்லது குற்றவாளியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாராகவோ இருக்கலாம்.
கூட்டுத் தண்டனை பெற்ற குழு பெரும்பாலும் குற்றவாளியுடன் ஒரே பகுதியில் வசிப்பதைத் தவிர வேறு எந்த நேரடி தொடர்பையும் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் கூட்டுத் தண்டனை என்பது குற்றவாளியின் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகக் கருத முடியாது. நான்காவது ஜெனீவா மாநாட்டின் பொதுவான பிரிவு 33 மற்றும் கூடுதல் நெறிமுறை II இன் பிரிவு 4 ஆகிய இரண்டிலும் கூட்டுத் தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளது. [1][2]
தடுப்பு முறைகள்
[தொகு]நவீன சட்ட அமைப்புகள் பொதுவாக குற்றவியல் தண்டனைச் சட்டம் தனிநபர்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. ஒரு சமூகக் குழு தன் மற்ற உறுப்பினர்களின் குற்றச் செயல்பாடுகளைக் கண்காணித்து கூட்டுப் பொறுப்புடன் செயலபட்டால் கூட்டுத் தண்டனையிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.[3]
கூட்டுத் தண்டனையின் வகைகள்
[தொகு]ஊரை விட்டு விலக்கி வைத்தல்
[தொகு]கூட்டுத் தண்டனையின் ஒரு வகையான, ஊரை விட்டு விலக்கி வைத்தல் என்பது இந்தியாவில் மன்னராட்சி காலத்திலிருந்து நடைமுறையில் உள்ளது. சமூக நடைமுறைக்கு எதிராகத் தொடர்ந்து செயல் புரியும் நபரையும், அவரது குடும்பத்தினரையும், உறவினரையும் கிராமம் அல்லது ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் என்பது இந்தியாவில் தொன்று தொட்டு வழங்கப்படும் ஒரு வகை கூட்டுத் தண்டனை ஆகும்.[4]தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல் என்பது சட்ட விரோதம் என அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 மற்றும் 2011ஆம் ஆண்டின் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கூறியுள்ளது.
கூட்டு அபராதம்
[தொகு]ஒரு குழு அல்லது ஒரு சமூகப் பிரிவின் தனிநபர் அல்லது நபர்கள் செய்யும் சமூகக் குற்றத்திற்கு யாரும் பொறுப்பு ஏற்காத போது, அத்தனிநபர் அல்லது தனிநபர்கள் சார்ந்த குழு அல்லது சமூகத்தின் மீது கூட்டு அபராதம் விதிப்பது நாட்டாமை தலைமையிலான இந்தியக் கிராமப் பஞ்சாயத்தின் வழக்கம். இந்த கூட்டு அபராதத் தொகையை கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வர். 13ஆம் நூற்றாண்டின் வின்செஸ்டர் சட்டம் (1285) எந்தவொரு திருட்டு அல்லது கொள்ளைக்கும் "முழு குழுவினரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியது..
வீடுகளை இடித்தல்
[தொகு]பண்டைய கிரேக்கத்தின் ஆட்சியின் கீழிருந்த மத்திய கிழக்குப் பகுதிகளின் ஆட்சியாளர்கள், குற்றச் செயல் புரிந்த கொலையாளிகளின் வீடுகளை இடிப்பதும், சொத்துகளைப் பறிமுதல் செய்தனர் என்பதை டமாஸ்கஸ்சின் நிக்கோலஸ்[5]பதிவு செய்துள்ளார்.
1967 முதல் 2023 இசுரேல்-ஹமாஸ் போர்கள் வரை, பாலஸ்தீனத்தின் பகுதிகளான காசாக் கரை மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஃபத்தா, ஹமாஸ் போன்ற கிளர்ச்சியாளர்களின் செயல்களுக்காக, ஒட்டு மொத்த பாலஸ்தீனர்களின் ஆயிரக்கணக்கான வீடுகள், கல்வி நிலையக் கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்களை இசுரேலிய பாதுகாப்புப் படைகளால் இடித்து தள்ளிப்பட்டது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2025 பகல்காம் தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்பட்ட பத்து காஷ்மீர் இளைஞர்களின் 10 வீடுகள் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.[6]
பெண்களை குறிவைத்து தாக்குதல்
[தொகு]1945ஆம் ஆண்டின் இறுதியில் இரண்டாம் உலகப் போரில் தோற்ற ஜெர்மனிக்குள் நுழைந்த செம்படையினரால் ஜெர்மானியப் பெண்கள் கூட்டுத் தண்டனைக்கு உள்ளானர்கள். நாஜி ஜெர்மனி அதிபர் இட்லரின் நாஜிப் படைகளுக்கு சேவை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெர்மானியப் பெண்களின் ஆடைகளை களைந்து பாரிஸ் நகரத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஜெர்மானியர்களுக்கு சேவை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் ஜெர்மானிய பாலியல் தொழிலாளி உதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[7]
பொது மக்கள் மீதான தாக்குதல்கள்
[தொகு]- 7 அக்டோபர் 2023 அன்று காசாக்கரையின் பதுங்கு குழிகளிலிருந்து புறப்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலின் தெற்கு மாவட்டத்தின் எல்லைப்புறப்பகுதிகளில் 59 கிலோ மீட்டர் தொலைவிற்கு புகுந்து, இஸ்ரேலியப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் தீவிரவாதிகள் காசாவிலிருந்து 5,000 ஏறிகணைகளை 80 கிலோ மீட்டர் வரை இஸ்ரேலில் ஏவினர்.[8] இத்தாக்குதலில 1,180 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[9] .இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 379 இசுரேலியப் படைவீரர்களும் அடங்குவர். 7,500 பேர் காயமடைந்தனர் மற்றும் 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேலிய சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.
- இஸ்ரேல் படையினரை அவமதிக்க வேண்டி, சூன் 2014இல் மேற்குக் கரையில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். [10]
பள்ளிகளில் கூட்டுத் தண்டனை
[தொகு]பள்ளிக்கூட வகுப்பறையில் தவறான நடத்தையில் ஈடுபட்ட மாணவன் அல்லது மாணவர்கள் யார் என்று தெரியாத நிலையில், ஒட்டு மொத்த வகுப்பு மாணவர்களை தண்டிப்பதாகும்.[11]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Garner, Bryan A., ed. (2007). Black's Law Dictionary (8th ed.). St. Paul, MN: Thomson West. p. 280. ISBN 978-0314151995.
Collective punishment was outlawed in 1949 by the Geneva Convention.
- ↑ Klocker, Cornelia. Collective Punishment and Human Rights Law: Addressing Gaps in International Law. Routledge.
- ↑ Kehoe, Dennis; McGinn, Thomas A. J., eds. (2017). Ancient Law, Ancient Society. University of Michigan Press. p. 3.
- ↑ சமூகப் புறக்கணிப்பு கூடாது
- ↑ Nicolaus of Damascus
- ↑ 10 Terrorists' Homes In Kashmir Razed Amid Crackdown After Pahalgam Attack
- ↑ Dworkin, Andrea (2000). Scapegoat: The Jews, Israel and [[:வார்ப்புரு:As written]] Liberation. Simon and Schuster. p. 53. ISBN 9780743210546. Archived from the original on March 26, 2023. Retrieved March 19, 2023.
{{cite book}}: URL–wikilink conflict (help) - ↑ Hamas terrorist attacks on October 7: The deadliest day in Israel's history
- ↑ "Israel's Dead: The Names of Those Killed in Hamas Attacks, Massacres and the Israel-Hamas War". Haaretz,. 25 July 2024 இம் மூலத்தில் இருந்து 3 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240803235317/https://www.haaretz.com/haaretz-explains/2023-10-19/ty-article-magazine/israels-dead-the-names-of-those-killed-in-hamas-massacres-and-the-israel-hamas-war/0000018b-325c-d450-a3af-7b5cf0210000. "Approximately 1,200 Israelis, civilians and soldiers were killed in their homes, communities and in confronting Hamas terrorists. Here are the officially confirmed names of Israel's dead in the atrocities of October 7 and the subsequent Israel-Hamas war … This list of 1618 names will be continuously updated with names that have been cleared for publication."
- ↑ 2014 Gush Etzion kidnapping and murder
- ↑ Collective punishment – Is it always wrong in schools?