கூட்டி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டி கோட்டை
அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் in இந்தியா
ஆள்கூறுகள் 15°06′48″N 77°39′05″E / 15.1133979°N 77.6514648°E / 15.1133979; 77.6514648
வகை கோட்டையமைப்பு
இடத் தகவல்

கூட்டி கோட்டை (Gooty Fort) இராவதுர்க்கம் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஆந்திராவின் கூட்டி நகரத்திலுள்ள ஒரு மலையின் மேல் அமைந்துள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும். கூட்டி என்ற சொல் (உள்ளூரில் "குட்டி" என உச்சரிக்கப்படுகிறது) நகரத்தின் அசல் பெயரான கௌதம்புரியிலிருந்து பெறப்பட்டது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.[1]

வரலாறு[தொகு]

கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள நரசிம்மர் கோயிலுக்கு அருகிலுள்ள பாறைகளில் எட்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால் மேலைச் சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்யனின் (கி.மு. 1076-1126) ஆட்சியைப் பற்றி அறியப்படுகிறது. தற்போதுள்ள கோட்டையும் பிற கட்டமைப்புகளும் சாளுக்கிய காலத்தின் பிற்பகுதியைக் குறிக்கிறது.[2]

இந்த கோட்டை பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இரண்டாம் வெங்கடபதி ராயனின் ஆட்சியின் போது (1584-1614), விஜயநகரப் பேரரசு குதுப் ஷாஹி வம்சத்திடம் கோட்டையை இழந்தது. பின்னர் குதுப் ஷாஹிகளின் தலைநகர் கோல்கொண்டாவை கைப்பற்றிய பின்னர் முகலாயர்கள் கோட்டையை கைப்பற்றியதாகத் தெரிகிறது. பொ.ச. 1746இல், மராட்டிய தளபதி முராரி ராவ் கோட்டையைக் கைப்பற்றி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதை தனது நிரந்தர இல்லமாக மாற்றி கோட்டையை செப்பனிட்டார். மேலும் சிறிய நுழைவாயில்களில் அலங்காரத்தையும் மேற்கொண்டார்.[3]

பொ.ச. 1775 இல், மைசூர் ஆட்சியாளர் ஐதர் அலி கோட்டையைத் தாக்கி முற்றுகையிட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, முராரி ராவ் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த கோட்டை பின்னர் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் நிர்வாகி தோமஸ் முன்ரோ அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[3]

கட்டிடக்கலை[தொகு]

இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 680 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைகளில் அமைந்துள்ளது. "மார் கூட்டி" என்று அழைக்கப்படும் கோட்டையின் ஒரே ஒரு நுழைவாயில் மேற்கு திசையில் அமைந்துள்ளது.[4] கோட்டையின் உச்சியில் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. இதில் ஒன்று வெடி மருந்துகளை பாதுகாக்குமிடமாக இருந்துள்ளது. பாழடைந்த நரசிம்மர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. 300 மீட்டர் உயரமுள்ள ஒரு குன்றில், " முராரி ராவின் இருக்கை" என்று அழைக்கப்படும் ஒரு சிறிய மண்டபம் உள்ளது. இங்கிருந்து கீழேயுள்ள நகரத்தை காணலாம். மராட்டியத் தளபதி முராரி ராவ் இங்கு சதுரங்க விளையாட்டிலும், ஊஞ்சலாட்டத்திலும் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.[3]


கீழ் கோட்டைகளில் தொடர்ச்சியான வலுவான சுவர்கள் உள்ளன., அவை நுழைவாயில்களால் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டுள்ளன. பருவகால மழைநீரை சேமிக்க பாறை பிளவுகளில் தோண்டப்பட்ட ஏராளமான நீர்த்தேக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. [3] கோட்டைச் சுவர்களுக்குள் 108 கிணறுகளும் தோண்டப்பட்டன.

கோட்டைக்குள் பல பாழடைந்த கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை சிறைச்சாலைகளாக கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகி தாமஸ் மன்ரோ பயன்படுத்தினார் . [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Centrally Protected Monuments". Archeological Survey of India (in ஆங்கிலம்). Archived from the original on 26 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2017.
  2. "Monuments in Anantpur". Archaeological Survey of India, Hyderabad Circle. Archived from the original on 14 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Monuments in Anantpur". Archaeological Survey of India, Hyderabad Circle. Archived from the original on 14 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10."Monuments in Anantpur". Archaeological Survey of India, Hyderabad Circle. Archived from the original on 14 June 2016. Retrieved 10 November 2016.
  4. Vinayak, Akshatha (2016-07-12). "Gooty Fort: Remembering Those Times". nativeplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டி_கோட்டை&oldid=3399602" இலிருந்து மீள்விக்கப்பட்டது