கூட்டாஞ்சோறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூட்டாஞ்சோறு என்பது கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்ணும் ஒரு விழா.

பிள்ளைகள்
குழந்தைகள் இவ்வாறு பெரியவர்கள் உண்பதை விளையாக நடித்து விளையாடுவதும் உண்டு. இதனைச் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறுசோறாக்கல் என்னும் பருவமாக வைத்துப் பாடல்கள் பாடியுள்ளன.
விழாக்கள்
முனியனார் போன்ற படைப்புத் தெழ்வங்களை வழிபடும்போது பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரே பொங்கலாக வைத்துப் படைத்துக் கூட்டாக உண்ணும் வழக்கம் நாட்டுப்புறங்களில் உண்டு. இது கூட்டாஞ்சோறு பழக்கத்தின் எச்சமிச்சம்.
அரசன்
அரசன் பெருஞ்சோறு வழங்குவது இதனோடு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று.
திருப்பாவை
ஆண்டாள் தன் தோழிமாரோடு கூடிக் கூட்டாஞ்சோறு உண்டதைக் குறிப்பிடுகின்றாள். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழி வார
    கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் - திருப்பாவை 27
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டாஞ்சோறு&oldid=1010459" இருந்து மீள்விக்கப்பட்டது