கூட்டமைவு VII (ஓவியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவரே கூறியபடி கூட்டமைவு VII ஓவியமே அவர் வரைந்தவற்றுள் மிகவும் சிக்கல் வாய்ந்தது ஆகும்.(கண்டின்ஸ்கி 1913)

கூட்டமைவு VII (Composition VII) என்பது, ரஷ்யாவில் பிறந்த, புகழ் பெற்ற ஓவியரான வசிலி கண்டின்ஸ்கி வரைந்த ஓவியம் ஆகும். 1913 ஆம் ஆண்டில் வரையப்பட்ட இவ்வோவியம், முதலாம் உலகப் போருக்கு முற்பட்ட, கண்டின்ஸ்கியின் சாதனைகளின் உச்சக்கட்டம் எனக் கருதப்படுகின்றது.

கண்டின்ஸ்கி இந்த ஓவியத்தை நேரடியாக வரையத் தொடங்கவில்லை. இதனை வரையுமுன், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் போன்றவற்றைப் பயன்படுத்தி முப்பது ஓவியங்களைச் சோதனை நிலையில், வரைந்துள்ளார். இவருடைய இந்தச் சோதனைக் கட்டத்தின் பின் நான்கு நாட்களுக்கும் குறைவான காலத்தில் இறுதி ஓவியத்தை வரைந்து முடித்ததார்.

இந்த ஓவியம் நடுவில் ஒரு ஒழுங்கற்ற செவ்வகத்தால் வெட்டப்படுகின்ற நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதனைச் சுற்றிலும், பல விதமான வடிவங்களும், நிறங்களும் சுழல்வதுபோல் உள்ளன. இவ்வோவியத்தின் இறுதி வடிவத்தில் படம் சார்ந்த எதுவும் இல்லாமல் முழுதும் பண்பியல் (abstract) ஓவியமாகவே உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டமைவு_VII_(ஓவியம்)&oldid=1777737" இலிருந்து மீள்விக்கப்பட்டது