பரகாயப் பிரவேசம்
Appearance
(கூடு விட்டுக் கூடு பாய்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரகாயப் பிரவேசம் என்பது கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். ஓர் உயிரற்ற உடலில் எம்முயிரை சென்றடையச் செய்வதும், அவ்வுயிரற்ற உடலினிற்கு உயிர் பெறச் செய்து நம் உடலினை உயிர் அற்ற நிலையினை ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகின்றது.இக்கலையினை செய்து காட்டியவர்கள் சித்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது இக்கூடு விட்டுக் கூடு பாய்தல் தந்திரக் கலை. மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல் கலையினை ஆதிசங்கரர், அருணகிரியார் போன்றவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அறுபத்து நான்கு ஆய கலைகளில் ஒன்றாகவும் இக்கலை உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கலையானது சமீபத்தில் வெளிவந்த போகன் என்கிற திரைப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது
உசாத்துணை நூல்கள்
[தொகு]- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்