கூடுதல் சத்துணவு உதவித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடுதல் சத்துணவு உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) என்பது ஐக்கிய அமெரிக்காவில் ஏழை எளியவர்களுக்கும், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் உணவுப் பொருள்களைச் சலுகை விலையில் வழங்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஐக்கிய அமெரிக்கா வேளாண் துறையினாலும் சத்துணவு சேவைத் துறையினாலும் நிருவகிக்கப் படுகிறது.[1] இதற்கு முன்பு இத்திட்டம் உணவு அட்டைத் திட்டம் (பூட் ஸ்டாம்ப் திட்டம்) எனப் பெயர் பெற்றிருந்தது.

2016 ஆம் நிதி ஆண்டில் 44.2 மில்லியன் அமெரிக்கர்கள் இந்தத் திட்டத்தால் பயன் அடைந்தார்கள். 70.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் வழங்கினார்கள். 2013 இல் நிலவிய பொருளியல் பின்னடைவின் போது இந்தத் திட்டத்தினால் விளிம்பு நிலையில் இருந்த மக்கள் மிகுந்த பலன்களைப் பெறறார்கள். அமெரிக்காவில் இது மிகப் பெரிய சத்துணவுத் திட்டம் எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்[தொகு]