உள்ளடக்கத்துக்குச் செல்

கூடிளி

ஆள்கூறுகள்: 14°0′22″N 75°40′27″E / 14.00611°N 75.67417°E / 14.00611; 75.67417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடிளி
கிராமம்
கூடிளியில் உள்ள இராமேசுவரர் கோயில், போசளர் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
கூடிளி is located in கருநாடகம்
கூடிளி
கூடிளி
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 14°0′22″N 75°40′27″E / 14.00611°N 75.67417°E / 14.00611; 75.67417
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மொழிகாலுவல்Official
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கூடிளி (Koodli) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள சீமக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். துங்கா ஆறும் பத்ரா ஆறும் சந்தித்து துங்கபத்திரை ஆறாக மாறுமிடமாகும்.

அமைவிடம்

[தொகு]

கூடிளி சிவமோகாவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது. இது துங்கா மற்றும் பத்ரா நதிகள் ஒன்றாக ஓடும் இடமாகும். எனவே கூடிளி என்று பெயர் வந்தது. இங்கு 16 ஆம் நூற்றாண்டில் சிருங்கேரி சாரதா மடத்தின் நரசிம்ம பாரதி சுவாமிகளால் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஸ்மார்த்த மடாலயம் ஒன்று உள்ளது. மடத்தினுள், சாரதாம்பாள் மற்றும் ஆதி சங்கரருக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. வெளியே, இராமேசுவரர் மற்றும் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட போசளர் காலத்தின் இரண்டு கோயில்கள் உள்ளன. இந்த ஊர் தெற்கின் வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது. சங்கராச்சாரியாரின் 600 ஆண்டுகள் பழமையான மடம் இன்னும் போசள மற்றும் ஒக்கேரி மன்னர்களின் கல்வெட்டுகளுடன் நிற்கிறது.

கூடிளியில் துங்கா ஆறு பத்ரா ஆற்றுடன் இணைகிறது
இராமேசுவரர் கோயிலுக்குள் ஒரு சிறிய சன்னதி

இந்த இடம் வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளது, போசளர் காலத்தைச் சேர்ந்த கோவில்கள் உள்ளன. கோயில்களுக்கு அருகில் செதுக்கப்பட்ட சாசனங்கள் அவை கட்டப்பட்ட காலத்தைக் குறிக்கின்றன. சரியான தேதிகள் சர்ச்சைக்குரியவை. ஆனால் சிற்பங்கள் பழைய இந்திய கலாச்சாரத்தைச் சேர்ந்தவை. மேலும் கவர்ச்சியானவைஇங்கு மேலும், பல்வேறு கோயில்கள் உள்ளன - சிறிய மற்றும் பெரிய கோயில்கள் இந்த இடத்தை பழைய காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்டன.

மதம்

[தொகு]

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமேசுவரர் கோயில் இப்பகுதியில் அமைந்துள்ளது. சங்கமேசுவரர் கோயிலுக்கு அருகில் சிந்தாமணி நரசிம்ம சுவாமி கோயிலும் உள்ளது. இது பிரகலாதனால் நிறுவப்பட்டு வணங்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆறுகள் புனிதமாக கருதப்படுகின்றன. நந்தியுடன் ஒரு சிறிய கோயில் இரண்டு ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது.

கூடிளியில் இரண்டு மடங்கள் உள்ளன. ஒன்று சங்கர மடம் ( அத்வைத தத்துவம்), மற்றொன்று அக்சோபிய தீர்த்தர் மடம் ( துவைதத் தத்துவம்).

கூடிளியில் உள்ள சிவன் ஆலயம்
கூடிளி சங்கமத்தின் இயற்கைக் காட்சி
கூடிளி சங்கமத்தில் சூரிய அஸ்தமனம்

நிலவியல்

[தொகு]
சங்கமம் - இரண்டு ஆறுகள் சந்திக்கும் சரியான இடத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஹரி ஹர கோயில்.

சிவமோகா நகரத்திலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த இடம் சாலை வழியாக அணுகப்படுகிறது. இங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஹோலேஹோனூர் என்பது அருகிலுள்ள கிராமமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடிளி&oldid=3048109" இலிருந்து மீள்விக்கப்பட்டது