உள்ளடக்கத்துக்குச் செல்

கூடல்லூர்

ஆள்கூறுகள்: 10°50′0″N 76°5′0″E / 10.83333°N 76.08333°E / 10.83333; 76.08333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடல்லூர்
சிற்றூர்
கூடல்லூர் is located in கேரளம்
கூடல்லூர்
கூடல்லூர்
கேரளத்தில் அமைவிடம்
கூடல்லூர் is located in இந்தியா
கூடல்லூர்
கூடல்லூர்
கூடல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°50′0″N 76°5′0″E / 10.83333°N 76.08333°E / 10.83333; 76.08333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுKL-52

கூடல்லூர் (Kudallur) என்பது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில், பட்டாம்பி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும் இது மலப்புறம் மாவட்ட எல்லையில், பாரதப்புழாவின் கரையிலும் உள்ளது. மலப்புறம் மாவட்டத்தில் உள்ள குட்டிப்புரம் நகரத்திலிருந்து கூடல்லூரை பாரதப்புழா ஆறு பிரிக்கிறது. கூடல்லூரானது திருத்தாலை சட்டமன்றத் தொகுதிக்கும், பொன்னானி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட பகுதியாகும்.

கூடல்லூரானது பட்டாம்பி வட்டம், பொன்னானி வட்டம் (மலப்புறம் மாவட்டத்தில் உள்ள தவனூர் கிராமம்) மற்றும் திரூர் வட்டம் (அண்டையிலுள்ள குட்டிப்புரம் நகரம்) ஆகிய மூன்று வட்டங்கள் சந்திக்கும் இடமாகும்.

வரலாறு

[தொகு]

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் இங்கு பிறந்தவராவார். இங்கிருந்து நன்கு அறியப்பட்ட மற்றொரு கலைஞர் அச்சுதன் கூடல்லூர் ஆவார். இப்பகுதியில் கடந்த காலத்தின் புகழ்பெற்ற ஆளுமைகளில், பி. கே. மொய்தீன் குட்டி சாகிப் ஒரு முக்கியமானவராவார். அவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரராவார். பிரித்தானியரால் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பி. கே. மொய்தீன் குட்டி சாகிப் 1937ல் சென்னை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றினர். 1942 வெள்ளத்தின் போது, பி.கே.மொய்தீன் குட்டி சாகிப் அனைத்து நிவாரணப் பணிகளிலும் முன்னணியில் இருந்தார். இரண்டாம் உலகப் போரின் காரணமாக நின்றுபோன குட்டிப்புரம் பாலத்தின் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்குவதற்கு இவர் முக்கியமாக பணியாற்றினார்.

இவரது உறவினர் பி. கே அப்துல்லா குட்டி சாகிப் இந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கண்ணூர் மற்றும் விய்யூர் சிறைகளில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.

நிருவாகம்

[தொகு]

கூடல்லூர் பாலக்காடு மாவட்டத்திலும், மலப்புறம் மாவட்டத்தின் எல்லையான பட்டாம்பி வட்டத்திலும் உள்ளது. இது அனகர்ரா ஊராட்சி, திரிதாலா ( சட்டமன்றத் தொகுதி) மற்றும் பொன்னானி (மக்களவைத் தொகுதி) ஆகியவற்றின் ஒரு பகுதியாக உள்ளது.

புவியியல்

[தொகு]

கூடல்லூரில் உள்ள, கூட்டக்கடவில் நிலா, தூதா ஆகிய இரண்டு ஆறுகள் சந்திக்கின்றன. இந்த ஆறுகள் சங்கமிப்பதால், 'கூடல்'+'ஊர்' என்ற இரு சொற்கள் இணைந்து கூடல்லூர் என்ற பெயரைப் இந்த இடம் பெற்றதாக கூறப்படுகிறது. நாயரின் கதைகளில் குறிப்பிடப்படும் கூடல்லூர் மலைகள் இங்கு உள்ள மற்றொரு ஈர்ப்பு மையமாகும். இந்த கிராமம் அனக்கரா பஞ்சாயத்தில், திரிதாலா ஊராட்சி ஒன்றியத்தில் அதாவது பட்டாம்பி வட்டத்தில் உள்ளது. 'வடக்குமுறி', 'முத்து விளையும் குன்னு', 'பாரப்புரம்' ஆகியவை கூடல்லூரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்லூர்&oldid=4181949" இலிருந்து மீள்விக்கப்பட்டது