கூடலசங்கமத்துப் பரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரணி இலக்கியங்களில் கூடலசங்கமத்துப் பரணி காலத்தால் முந்திய கொப்பத்துப் பரணி நூலை அடுத்துத் தோன்றிய இரண்டாவது பரணி நூல்.

கூடலசங்கமம் என்பது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆறும், துங்கபத்திரா ஆறும் கூடுமிடம்.

சோழர் ஆட்சி

 • கங்கை கொண்ட சோழன் (முதலாம் இராசேந்திரன்)
 • கங்கை கொண்ட சோழனின் முதல் மகன் முதலாம் இராசாதிராசன்
 • கங்கை கொண்ட சோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் இராசேந்திரன்
 • கங்கை கொண்ட சோழனின் மூன்றாம் மகன் வீரராசேந்திரன்

கொப்பத்துப் போரில் இரண்டாம் இராசேந்திரன் வென்றதன் பின்னும் மேலைச் சாளுக்கியரோடு சோழர் தொடர்ந்து போரிடவேண்டியதாயிற்று.

சோழர்க்கும் கீழைச் சாளுக்கியருக்கும் இடையே திருமண உறவு உண்டாயிற்று. இதனால் மேலைச் சாளுக்கியர் பகை மேலும் வலுத்தது.

கீழைச் சாளுக்கியரது வேங்கி நாட்டை மேலைச் சாளுக்கியர் தாக்கினர். இதனால் வீரராசேந்திரன் மேலைச் சாளுக்கியரோடு மூன்று முறை போரிட வேண்டியராயிற்று. மூன்றாவது போர் கூடலசங்கமம் என்னுமிடத்தில் நடைபெற்றது. மேலைச்சாளுக்கியன்சோமேசுவரனுக்கு எதிராக இந்தக் கூடல சங்கமப் போரில் வீரராசேந்திரன் பெற்ற வெற்றியைப் பாடியதே கூடலசங்கமத்துப் பரணி.

கூடலசங்கமத்துப் பரணி நூல் இப்போது கிடைக்கவில்லை.
என்றாலும் இந்தப் பரணி நூல் பற்றிப் பின் வந்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1]

நூலின் காலம் 11-ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  • கலிங்கத்துப் பரணி கண்ணி 103
  • விக்கிரம சோழன் உலா - கண்ணி 21
  • இராசராசன் உலா கண்ணி 25
  • சங்கரசோழன் உலா கண்ணி 21-22
  • வீரசோழிய உரையில் இரண்டு வெண்பா