உள்ளடக்கத்துக்குச் செல்

கூச்சாய் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°05′22.2″N 101°41′39.12″E / 3.089500°N 101.6942000°E / 3.089500; 101.6942000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY27   CC28 
கூச்சாய்
| எம்ஆர்டி
கூச்சாய் எம்ஆர்டி நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Bandar Malaysia Utara
அமைவிடம்கூச்சாய் லாமா, கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°05′22.2″N 101°41′39.12″E / 3.089500°N 101.6942000°E / 3.089500; 101.6942000
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடைதீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி
தரிப்பிடம்Parking உண்டு (கட்டணம்)
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடு PY27   CC28 
வரலாறு
திறக்கப்பட்டது புத்ராஜெயா  16.03.2023
 எம்ஆர்டி சுற்று  2028–2030
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
பண்டார் செலாத்தான்
குவாசா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
நாகா இமாஸ் எம்ஆர்டி
புத்ராஜெயா
   
பண்டார் செலாத்தான்
வலது சுற்று
 
சுற்று வழித்தடம்
(எதிர்கால திட்டத்தில்)
 
கிள்ளான் லாமா
இடது சுற்று
அமைவிடம்
Map

கூச்சாய் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kuchai MRT Station; மலாய்: Stesen MRT Kuchai) என்பது மலேசியா, கோலாலம்பூர் தென்கிழக்குப் பகுதியில் கூச்சாய் லாமா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். கூச்சாய் லாமா பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

தற்போது  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்திற்கும்  PY28  தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம்  PY27  எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[1]

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது. இந்த நிலையத்தின் அசல் பெயர் கூச்சாய் லாமா; பின்னர் கூச்சாய் என்று மாற்றம் செய்யப்பட்டது.

வரலாறு

[தொகு]

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); 12 புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் கூச்சாய் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது.

முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது 12 புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இந்த  PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.[1]

கட்டுமானங்கள்

[தொகு]

டபிள்யூ-சிடி நிறுவனத்துடன் (WCT Holdings Berhad) மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான உடன்படிக்கையின் கீழ் கூச்சாய் எம்ஆர்டி நிலையம் நிலத்தடியில் உருவாக்கப்பட்டது. 2017 செப்டம்பர் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 199.5 மில்லியன் மதிப்பிலான  PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலைய கட்டுமான கட்டமைப்புகள் டபிள்யூ-சிடி நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.

கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும். அவற்றுள்  PY28  தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி நிலையத்தின் கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளும் உள்ளடங்கும்.[2][3][4]

அத்துடன், பண்டார் மலேசியா தொடங்கி கம்போங் முகிபா (Kampung Muhibbah) புறநகர்ப் பகுதி வரையிலான நிலத்தடி இருப்புப்பாதையின் கட்டுமானமும் அந்த உடன்படிக்கையில் அடங்கும். இந்த உடன்படிக்கையும் அதே டபிள்யூ-சிடி நிறுவனத்திடம் நவம்பர் 2016-இல் RM 896.4 மில்லியனுக்கு வழங்கப்பட்டது.[5]

செயல்பாடு

[தொகு]

கூச்சாய் எம்ஆர்டி நிலையம் பொதுமக்களுக்கு மார்ச் 16, 2023 அன்று திறக்கப்பட்டது.  KC03   PY13  கம்போங் பத்து நிலையம் முதல்  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

இந்த நிலையத்தில் தற்போதைக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.

 புத்ராஜெயா  — கூச்சாய் எம்ஆர்டி நிலையம்
நுழைவாயில் அமைவிடம் இலக்கு தோற்றம்
A கூச்சாய் லாமா சாலை வாடகை வாகன சவாரி அழைப்பு (E-hailing) (→) ரெசிடென்சி குடியிருப்பு (→) அஜினோமோட்டோ மலேசியா (→) கூச்சாய் தொழில்முனைவர் பூங்கா (→) கூச்சாய் லாமா
B
மாற்றம்
எம்ஆர்டி3 பரிமாற்று வழி எதிர்காலத்தில் எம்ஆர்டி சுற்று வழித்தடத்துடன் (எம்ஆர்டி3) இணைப்பு -

பேருந்து சேவைகள்

[தொகு]
கூச்சாய் எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து வழித்தடம் நடத்துனர் முனையம்
T585  சுங்கை பீசி வழித்தடம் ரேபிட் கேஎல் KL1218 கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A தாமான் தேசா
T586  KL1218 கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A தாமான் ஓயூஜி
T587  KL1218 கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A தேசா பெட்டாலிங்
T588  KL1218 கூச்சாய் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A கிள்ளான் லாமா சாலை

காட்சியகம்

[தொகு]

கூச்சாய் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
  2. "WCT to build two elevated MRT stations for RM199.5m" [WCT akan membina dua stesen MRT bertingkat dengan harga RM199.5m]. The Edge Market (in ஆங்கிலம்). 20 September 2017. Retrieved 16 December 2022.
  3. "MRT Corp award RM200m job to WCT" [MRT Corp menganugerahkan kerja RM200m ke WCT]. New Starits Times (in ஆங்கிலம்). 19 November 2022. Retrieved 16 December 2022.
  4. "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). 6 November 2016. https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded. 
  5. "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]