கூசெவ் (குழி)
கூசெவ் (Gusev) என்பது செவ்வாய்க் கோளில் உள்ள ஒரு பள்ளம் அல்லது குழி ஆகும். இது 14°30′S 175°24′E / 14.5°S 175.4°E என்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது. இது தோரயமாக 166 கி.மீ விட்டம் உடையது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்குழி உருவானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு மாத்வெய் கூசெவ் (1826–1866) என்ற உருசிய வானியலாளரின் பெயர் 1976 ஆம் ஆண்டில் சூட்டப்பட்டது.
செவ்வாயின் கடந்த காலத்தில் இந்த பள்ளத்திலுள்ள திரவ நீர், அல்லது தண்ணீர் மற்றும் பணி போன்றவை மாதிம் பள்ளத்தாக்கு என்ற பெயர் கொண்ட கால்வாயின் வழி வடிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப் பள்ளம் பார்ப்பதற்கு பழைய ஏரி போன்றும் 3000 அடி மணல் படுக்கையால் நிரப்பப்பட்டுள்ளது. மாதிம் பள்ளத்தாக்கு கால்வாய் கூசெவ் குழியில் இணையும் பகுதி ஆற்றுக் கழிமுகங்கள் போன்று உள்ளது.
இது போன்ற கழிமுகங்கள் பூமியில் உருவாக பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ஆகலாம். இதன் மூலம் இந்த பகுதியில் நீண்ட நாள் தண்ணீர் பாய்ந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் சமீபத்தில், செயற்கைக்கோள் படங்கள் கூசெவ் குழியின் தரையில் தூசிபுயல் நகர்வதற்கான சுவடுகளைக் காட்டியுள்ளது. பின்னர் இசுபிரிட் தளவுளவி தரையில் இருந்து தூசிபுயலின் புகைப்படத்தை எடுத்துள்ளது, மேலும் இந்த தூசிபுயல், இசுபிரிட் தளவுளவியில் உள்ள சூரிய வெப்ப சேகரிப்பானில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்துள்ளது.
இசுபிரிட் தளவுளவி (MER-A, Mars Exploration Rover - A), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (rover) முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூசெவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுளவியான ஆப்பர்சூனிட்டி தளவுளவி (Oppportunity Rover) இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) தரையிறங்கியது.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Google Mars zoomable map - centered on Gusev
- Colored THEMIS VIS picture, inside the crater