கூக்கபரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூக்கபரா
ஆத்திரேலியா, தாசுமேனியாயாவில் சிரிக்கும் கூக்கபுர்ரா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: Halcyonidae
பேரினம்: Dacelo
வில்லியம் லீச், 1815

கூக்கபரா (Kookaburra) என்பது ஆத்திரேலியாவின் தென்பகுதியிலுள்ள காடுகளில் காணப்படும் ஒரு வகைப் பறவை. இவை எழுப்பும் மிகுந்த ஒலிக்காக இவை பெயர்பெற்றவை. இவை பொழுது விடியும் போதும் இறங்கும் போதும் ஒலி எழுப்பும். மரப்பொந்துகளில் வசிக்கின்றன. மீன்கள், சிறு பாலூட்டிகள், தவளைகள், பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன. பூச்சிகளை இவை விரும்பி உண்கின்றன.

ஒன்று முதல் நான்கு முட்டைகளை வசந்த காலத்தில் இடுகின்றன. ஆண் பறவையே கூட்டைப் பாதுகாக்கும். கூக்கபர்ரா குஞ்சுகள் நான்கு ஆண்டுகள் வரை பெற்றோருடன் இருக்கும்.


இவற்றையும் காண்க[தொகு]

சிரிக்கும் கூக்கபரா

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூக்கபரா&oldid=1732213" இலிருந்து மீள்விக்கப்பட்டது