கூகைக் கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

’’’ கூகைக் கிழங்கு ‘’’ மலைப் பகுதிகளிலும், மலை அடிவாரங்களிலும் மழைக் காலங்களில் தானே வளரும் செடி இனத்தைச் சேர்ந்தது. இதைக் கிழங்காகப் பயிரிட்டு வருகின்றனர்.

அரரூட் மாவு[தொகு]

வெள்ளை நிறமுடைய இதன் கிழங்கை அரரூட் கிழங்கு என்றும் கூறுவர். அரரூட் மாவு இதன் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

செய்முறை[தொகு]

முற்றிய கிழங்கை தோல் நீக்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்த வேண்டும். காய்ந்த பின் இடித்துத் தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை நீரில் கரைத்து மூன்று முறை வடிகட்டி கிடைக்கும் மாவை வெயிலில் நன்கு உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.

மருத்துவப் பயன்[தொகு]

சிறுநீர்க் கோளாறுகளுக்கு இந்த மாவை கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீர் சம்மந்தமான நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு தீரும்.

ஆதாரம்[தொகு]

காய்களின் மருத்துவப் பயன்கள்

வைத்தியர் திலகம் டாக்டர் கே. ஆறுமுகம். உதயம் வெளியீடு, சென்னை

               டிசம்பர் 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகைக்_கிழங்கு&oldid=2723537" இருந்து மீள்விக்கப்பட்டது