கூகுள் நிலப்பட உருவாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கூகுள் மேப் மேக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூகுள் நிலப்பட உருவாக்கி
Google-Map Maker Logo.png
Google Map Maker.jpeg
கூகுள் நிலப்பட உருவாக்கியில் ஒரு தோற்றம்
உரலி www.google.com/mapmaker
தளத்தின் வகை நிலப்பட உருவாக்கம்
பதிவு செய்தல் ஆம்
கிடைக்கும் மொழி(கள்) ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள்
உரிமையாளர் கூகுள்
உருவாக்கியவர் கூகுள்
தற்போதைய நிலை செயல்பாட்டில் உள்ளது


கூகுள் நிலப்பட உருவாக்கி அல்லது கூகுள் மேப் மேக்கர் (Google Map Maker) என்பது இணையத்தில் புவியின் நிலப்படங்களை உருவாக்கப் பயன்படும் இணையதளம் ஆகும். இதில் தெருக்கள், சாலைகள் வாரியாக அனைத்தையும் குறிக்கலாம், தொகுக்கலாம். குறிக்கப்பட்ட இடங்கள் கூகுள் நிலப்படங்கள் இணையதளம் மற்றும் தேடு பொறியில் இற்றைப்படுத்தப்படும். இச்சேவையினை பிரபல இணையம் மற்றும் மென்பொருள் நிறுவனமான கூகுள் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் இலவசமாக வழங்குகிறது.[1]

பயன்படுத்தும் முறை[தொகு]

கூகுள் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் நிலப்படங்களை உருவாக்கவோ தொகுக்கவோ முடியும். ஏற்கனவே செய்மதிப் பார்வை இருப்பதால் அதன் மீது நாம் இடங்களைத் தொகுக்கலாம். நாம் குறித்த இடமானது மற்றொரு பயனரின் பார்வைக்கு அனுப்பப்படும். அவர் அங்கீகரித்தவுடன் உடனடியாக அது வேறொரு வரையறுக்கப்பட்ட நிர்வாகியால் மேற்பார்வையிடப்பட்ட பின் கூகுள் நிலப்படத்தில் சேர்க்கப்படும்.

புதிய இடங்களைக் குறித்தல்:[தொகு]

செய்மதிப் பார்வையைத் (Satellite View) தேர்ந்தெடுத்த பின்னர் நாம் குறிக்க வேண்டிய இடமானது எந்த வகை என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதிதாகக் குறிப்பதற்கு கீழ்காணும் இட வகைகள் உள்ளன:

  1. புள்ளி (Point) - கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், முகவரிகள், சிலைகள், கோயில்கள், பொழுது போக்கு சார்ந்தவைகள், பொருள் வாங்கல் (Shopping) சார்ந்தவைகள்
  2. கோடு (Line) - சாலைகள், புகைவண்டித் தடவாளங்கள், நதிகள், பாலங்கள் போன்றவை
  3. எல்லை (Boundary) - ஊர்கள், கிராமங்கள், ஏரிகள், மைதானங்கள், வளாகங்கள் மற்றும் பெரிய அளவிலான அனைத்தும்.

இடங்களைத் தொகுத்தல்:[தொகு]

ஏற்கனவே உள்ள இடங்களை தொகுக்கவோ பெயர் மாற்றவோ, அதிகத் தகவல் சேர்க்கவோ வேண்டுமெனில் முதலில் தொகுக்க வேண்டிய இடத்தை தேர்ந்ததெடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்க கீழ்காணும் வழிமுறைகள் உள்ளன:

  1. தேடுதல் (Browse/Search)- இடத்தின் பெயரைத் தட்டச்சி தேர்ந்தெடுப்பது.
  2. புள்ளியைத் தேர்ந்தெடுப்பது (Selecting Point) - நிலப்படத்தில் காணும் புள்ளியை நேரடியாக சொடுக்கித் தேர்ந்தெடுப்பது.
  3. பகுதியைத் தேர்ந்தெடுப்பது (Selecting Boundary)- நிலப்படத்தில் காணும் பகுதியைத் நேரடியாக சொடுக்கித் தேர்ந்தெடுப்பது.

பயன்கள்[தொகு]

  • மக்களாலேயெ தொகுக்கப்படுவதால் அனைத்து விதமான இடங்களும் அந்தந்த பகுதி மக்களாலேயே குறிக்கப்படும். இதன் மூலம் நமது பயணம் இலகுவாகும்.
  • அலைபேசியிலும் இப்போது கூகுள் நிலப்பட மென்பொருள் வசதி இருப்பதால் நாம் நமது இருப்பிடத்தை அறியவும், செல்லும் இடத்தைத் தேடவும் மிக எளிதாகிறது.
  • தானுந்துகளில் இப்போது இவ்வசதி செய்யப்படுகிறது, இதனால் எரிபொருள் நிலையங்களைக் கண்டறிவது சுலபம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Introducing Google Map Maker