கூகுள் கலைச் செயல்திட்டம்
Jump to navigation
Jump to search
![]() கூகுள் கலைச் செயல்திட்டம் இணையதளத்தில் ஒரு மாதிரித் தோற்றம் | |
உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 1, 2011 |
இணையத்தளம் | http://googleartproject.com |
கூகுள் கலைச் செயல்திட்டம் அல்லது கூகுள் ஆர்ட் ப்ரோசெக்ட் (Google Art Project) என்பது உலகின் தலைசிறந்த மற்றும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்கள், கண்காட்சியகங்கள் போன்றவற்றை இணையம் மூலம் நாமே நேரில் சென்று நடந்து பார்ப்பது போன்ற முப்பரிமாணத் தோற்றத்தில் காண உதவும் மென்பொருள் ஆகும். இந்த வசதியை கூகுள் நிறுவனம் மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அருங்காட்சியகங்களில் உள்ள அரிய பொருட்களையும் ஓவியங்களையும் நாம் மிக நெருக்கமான முப்பரிமாணத் தோற்றத்தில் காணலாம். மேலும் நாம் நமது சொந்த கலைப் படைப்புகளையும் இத்தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இச்சேவையினை பயன்படுத்த எந்த விதமான மென் பொருட்களையும் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவியிலேயே நேரடியாக பயன்படுத்தலாம்.