கு. திருப்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கு. திருப்பதி
தொகுதி மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 9, 1930(1930-08-09)
மதுரை மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு செப்டம்பர் 30, 2015(2015-09-30) (அகவை 85)
மதுரை
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) மல்லிகா
பணி அரசியல்வாதி, வழக்கறிஞர்

கு. திருப்பதி (ஆகத்து 9, 1930 - செப்டம்பர் 30, 2015) தமிழக அரசியல்வாதி ஆவார்.

இவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் குழந்தைவேல் பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் 1971-இல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2] மதுரையைச் சேர்ந்த இவர் மதுரைக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்று, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அரசியலுக்கு வரும் முன் வழக்கறிஞராக பணியாற்றினார்.

செப்டம்பர் 30, 2015-ல் மாலை சுமார் 6.30 மணியளவில் காலமானார்.[3][4][5] திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர், கு. திருப்பதி க்கான இரங்கல் செய்தியை முரசொலி பத்திரிகையில் தெரிவித்தார்.[6] இவரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 ஆம் தேதி ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. தினத்தந்தி செய்தித்தாள்
  4. முரசொலி செய்தித்தாள்
  5. தினமலர் செய்தித்தாள்
  6. திமுக தலைவர் கலைஞர், கு. திருப்பதி க்கான இரங்கல் செய்தியை முரசொலி பத்திரிகையில் தெரிவித்தார்
  7. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கற் குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._திருப்பதி&oldid=2703749" இருந்து மீள்விக்கப்பட்டது