குஷால் டாண்டன்
Appearance
குஷால் டாண்டன் | |
---|---|
பிறப்பு | 28 மார்ச்சு 1985 லக்னோ, இந்தியா |
பணி | மாடல், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2005-அறிமுகம் |
குஷால் டாண்டன் (பிறப்பு: 1985 மார்ச் 28) ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர் மற்றும் விளம்பர நடிகர். 2011ஆம் ஆண்டு தெய்வம் தந்த என் தங்கை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து நாச் பாலியே 5 என்ற நடன நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் 7, பியர் பேக்டர்: கத்ரோன் கே கிலாடி (சீசன் 5) போன்ற நிகழ்ச்சிகளிலும் தோன்றினார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]குஷால் 1985 மார்ச் 28ஆம் திகதி லக்னோ, இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு தொழிலதிபர். இவருக்கு டினா பூஷன், பாவனா டாண்டன் கபூர் என்ற இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளன.
சின்னத்திரை
[தொகு]- 2011-2013: தெய்வம் தந்த என் தங்கை
- 2012-2013: நாச் பாலியே 5
- 2013: பிக் பாஸ் 7
- 2014: பியர் பேக்டர்: கத்ரோன் கே கிலாடி (சீசன் 5)
விருதுகள்
[தொகு]- இந்திய தொலைக்காட்சி விருது - புதிய முகம் (ஆண்)