குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 29°13′36″N 047°58′48″E / 29.22667°N 47.98000°E / 29.22667; 47.98000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவைத் பன்னாட்டு வானூர்திநிலையம்

مطار الكويت الدولي
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது/இராணுவம்
இயக்குனர்சிவில் ஏவியேசன் இயக்குநரகம் (குவைத்)
சேவை புரிவதுகுவைத் நகரம், குவைத்
அமைவிடம்பர்வானிய கவர்னரேட்டு, குவைத்
மையம்
  • குவைத்து ஏர்வேசு
  • யசீரா ஏர்வேசு
உயரம் AMSL206 ft / 63 m
ஆள்கூறுகள்29°13′36″N 047°58′48″E / 29.22667°N 47.98000°E / 29.22667; 47.98000
இணையத்தளம்http://www.dgca.gov.kw
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
15R/33L 3,400 11,155 பைஞ்சுதை
15L/33R 3,500 11,483 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள்15,735,580
Sources:[1][2]

குவைத் பன்னாட்டு வானூர்திநிலையம் (Kuwait International Airport) குவைத் நாட்டின் அல்பார்வானியாவில் அமைந்துள்ளது. குவைத் நகரத்திற்கு தெற்கே 15.5 கிலோமீட்டர் தொலைவில் இவ்வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. 37.7 சதுரகிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்து கிடக்கும் இந்நிலையம் குவைத் மற்றும் யசீரா வான்வழிப் போக்குவரத்து நிலையங்களின் முதன்மையான மையமாக செயல்படுகிறது.

விமான நிலைய வளாகத்தின் ஒரு பகுதி குவைத் விமானப்படையின் தலைமையகத்தையும், குவைத் விமானப்படை அருங்காட்சியகத்தையும் கொண்ட அப்துல்லா அல்-முபாரக் விமான தளமாக ஒதுக்கப்பட்டுள்ளது [3].

2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் நாள் முதல் கொரோனா வைரசு அச்சம் காரணமாக குவைத் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து வணிக விமானங்கள் அனைத்தும் தங்கள் சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]

வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
இன்டிகோ அகமதாபாத், தில்லி, மும்பை, சென்னை, கொச்சி
எடிஹட் ஏர்வேஸ் அபுதாபி
எமிரேட்ஸ் எயர்லைன் துபாய்
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அடிஸ் அபாபா
ஏர் அரேபியா சார்ஜா
ஏர் இந்தியா அகமதாபாத், ஐதராபாத்து, மும்பை, சென்னை, கோவா
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கண்ணூர், மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு , திருச்சிராப்பள்ளி
பரதுபாய் துபாய்
சிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு
பிரித்தானிய ஏர்வேஸ் இலண்டன் - ஹீத்ரோ
கோஏர் கண்ணூர்,
ஜஸீரா ஏர்வேஸ் ஐதராபாத்து, தில்லி, துபாய், கொச்சி, மும்பை

மேற்கோள்கள்[தொகு]

  1. Airport information for OKBK from DAFIF (effective October 2006)
  2. Airport information for KWI at Great Circle Mapper. Source: DAFIF (effective October 2006).
  3. "From nothing to something – Cargo City takes shape". Af.mil. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.

புற இணைப்புகள்[தொகு]