குவைத் தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவைத்து தேசிய அருங்காட்சியகம்
Kuwait National Museum
متحف الكويت الوطني
Kwnmuseum.jpg
நிறுவப்பட்டது1983
அமைவிடம்குவைத் நகரம் குவைத்


குவைத்து தேசிய அருங்காட்சியகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கப்பல்


குவைத்து தேசிய அருங்காட்சியகம் ( Kuwait National Museum) என்பது குவைத்து நாட்டில் அமைந்துள்ள குவைத்தின் தேசிய அருங்காட்சியகம் ஆகும். 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ்வருங்காட்சியகம் மைக்கேல் எக்கோகாரடு என்பவரால் வடிவமைக்கப்பட்டது[1].

மத்தியில் உள்ள ஒரு தோட்டத்தைச் சுற்றிலும் ஐந்து கட்டிடங்களாக இவ்வருங்காட்சியகம் அமைந்துள்ளது. மத்தியில் முற்றங்களுடன் கூடிய தாய்நாட்டு அரபு மண்வீடுகளின் கட்டிடக்கலைக்கு இணையாக இக்கட்டிடங்களின் கலையமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதான கட்டிடங்கள் ஐந்தும் உயர்ந்த நடைபாதைகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. அரேபியத் தீபகற்பத்தின் அறிவு , புவியியல், வரலாறு மற்றும் நாகரிகம் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கட்டிடங்கள் குழுப்படுத்தப்பட்டுள்ளன என்று எக்கோகாரடு விளக்கமளிக்கிறார்[2]

இவ்வருங்காட்சியகம் புறக்கணிக்கபட்டும் சரியாகப் பயன்படுத்தப்படாமலும் காணப்படுவதாக 2014 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன."[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. ArchNet Digital Library
  2. Ecochard, Michel."The National Museum of Kuwait”. In Places of Public Gathering in Islam, edited by Linda Safran. Philadelphia: Aga Khan Award for Architecture, 1980.
  3. Gonzales, Desi (November–December 2014). "Acquiring Modernity: Kuwait at the 14th International Architecture Exhibition". Art Papers (Atlanta, Georgia, United States of America: Art Papers). http://www.artpapers.org/feature_articles/feature3_2014_1112.html. பார்த்த நாள்: January 11, 2015.