குவைத்தில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவைத்தில் பெண்கள்
குவைத் பெண்கள்
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.274 (2012)
தரவரிசை47th
தாய் இறப்புவீதம் (100,000க்கு)14 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்12.7% (2017)
பெண் தொழிலாளர்கள்59.4% (2018)[1]
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[2]
மதிப்பு0.630 (2018)
தரவரிசை126th out of 136

குவைத்தில் பெண்கள் (Women in Kuwait) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் விடுவிக்கப்பட்ட பெண்களாக குவைத் பெண்கள் உள்ளனர். 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் அரபு நாடுகளில் குவைத் முதலிடத்தைப் பிடித்தது.[3][4][5] 2013ஆம் ஆண்டில், குவைத் பெண்கள் 53% தொழிலாளர்களாக இருந்தனர்.[6] குவைத் பெண்கள் பணியாளர்களில் ஆண்களை விட அதிகமாக உள்ளனர்.[7]

எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து குவைத்தில் பெண்கள் பல மாற்றங்களை சந்தித்துள்ளனர். 1960களில் தொடங்கி இன்றும் தொடரும் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டின் நீண்ட வரலாறு அவர்களிடம் உள்ளது. 1950களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அவர்களின் அணுகல் வியத்தகு அளவில் அதிகரித்தது.

எண்ணெய்க்கு முந்தைய காலத்தில் பெண்கள்[தொகு]

17ஆம் நூற்றாண்டு முதல் 1950களில் எண்ணெய் கண்டுபிடிக்கும் வரை குவைத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் கடல் வர்த்தகத்தை சார்ந்திருந்தது. ஆண்கள் கடற்பரப்பில் இருந்தபோது, குவைத்தின் பெண்கள் தங்கள் வீடுகளை நிர்வகித்தனர். மேலும் குடும்ப விவகாரங்களையும் நிதிகளையும் கட்டுப்படுத்தினர். தங்களால் செலவலிக்கக்கூடிய பணத்தை கொண்ட குடும்பங்களில், பெண்கள் அதிக நேரம் செலவளிக்க முற்றத்தைக் கொண்ட வீடுகள் மற்றும் அரண்மனைகள் கட்டப்பட்டன. இந்த அமைப்பு, தெருவை விட வீட்டிற்குள் எதிர்கொள்ளும் உயர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுடன், பெண்களை பொது பார்வையில் இருந்து நீக்கியது. நகர்ப்புற, உயர் வர்க்க பெண்கள் பொதுவெளியில் பங்கேற்பது குறைவாகவே இருந்தது.[8] இருப்பினும், குறைந்த அதிர்ஷ்ட சூழ்நிலைகளைச் சேர்ந்த பெண்களுக்கு மிகக் குறைந்த அனுபவம் இருந்தது; அவர்கள் தினசரி கடைவீதிகளுக்குச் சென்று, குடிநீரைப் பெற்றுக் கொண்டு, நதிக்கரையில் தங்கள் குடும்பத்தினரின் துணிகளைக் சுத்தம் செய்ந்தார்கள்.[9] குவைத் பெண்கள் 1916ஆம் ஆண்டில் முதல் குர்ஆன் பள்ளி நிறுவப்பட்டபோது வேதத்தைக் கற்கத் தொடங்கினர். இதற்குப் பிறகு பல பெண்கள் மத பயிற்றுநர்களாக பணியாற்றத் தொடங்கினர். முதல் தனியார் பள்ளி 1926இல் திறக்கப்பட்டது; இது வாசிப்பு, எழுதுதல் மற்றும் சித்திரத்தையல்ஆகியவற்றைக் கற்பித்தது. 1937ஆம் ஆண்டில் பொதுப் பள்ளிப்படிப்பு தொடங்கியது. ஆனால் அதில் சில காலம் சேர்க்கை குறைவாக இருந்தது; இருப்பினும், 1940களில் பல இளம் குவைத் பெண்கள் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த கல்வி முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளுக்காக பெரும்பாலும் பெண்களே முன்வந்தனர், 1956 ஆம் ஆண்டில் ஒரு இளம் பெண்கள் தங்கள் உடையான அபாயாக்களை எரித்தனர்.

வேலைவாய்ப்பு[தொகு]

தொழிலாளர் விரிவில் குவைத் பெண்களின் பங்களிப்பு பிராந்திய வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் சராசரியை விட மிக அதிகம். வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை குவைத்தில் அதிக சதவீதமாக உள்ளது.[10][11] குவைத் பெண்கள் பணியாளர்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர்.[7]

2013ஆம் ஆண்டில், குவைத் பெண்கள் 53% தொழிலாளர் பிரிவில் பங்கேற்றனர்.[6] குவைத் பெண்களுக்கான குவைத்தின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா சராசரியை விட மிக அதிகம்.

நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகள்[தொகு]

குவைத்தில் பெண்கள் செயல்பாடுகள் என்பது 1950களில் தொடங்கியது. முதல் மகளிர் அமைப்பான, அரபு மகளிர் மறுமலர்ச்சி சங்கம் (பின்னர் குடும்ப மறுமலர்ச்சி சங்கம் என மாற்றப்பட்டது), 1962இல் நூரேயா அல்-சதானியால் நிறுவப்பட்டது. விரைவில் 1963 பிப்ரவரியில் பெண்கள் கலாச்சார மற்றும் சமூக சங்கத்தால் பின்பற்றப்பட்டது. பெண்கள் சங்கம் (நாடி அல்பாடட்) 1975இல் நிறுவப்பட்டது. அதன் ஆரம்ப கவனம் விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் மீது இருந்தது. 1981ஆம் ஆண்டில் பயாடர் அஸ்-சலாம், என்ற கலாச்சார விழிப்புணர்வின் நோக்கம் கொண்ட ஒரு மதக் குழு உருவாக்கப்பட்டது. ஷேக்கா லத்தீபா அல்-சபாவின் இஸ்லாமிய பராமரிப்பு சங்கம் நிறுவப்பட்ட அதே ஆண்டு, இது இஸ்லாத்தையும் ஒரு இஸ்லாமிய வாழ்க்கை முறையையும் நடத்தையையும் பரப்ப முயன்றது.[12]

1990இல் ஈராக் படையெடுப்பை எதிர்ப்பதில் குவைத் பெண்கள் பெரும் பங்கு வகித்தனர். அவர்கள் எதிர்ப்பைத் திரட்டினர், "அல்-குவைத்தியா" என்று அழைக்கப்படும் ஒரு மறைமுக எதிர்ப்புக் கட்டுரையைத் தொடங்கினர். ஈராக்கிய சோதனைச் சாவடிகள் வழியாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கடந்து, அபயாக்களைப் பயன்படுத்தி வெடிபொருட்களைக் கொண்டு சென்றனர். உணவு மற்றும் மருந்துகளை சேகரித்து விநியோகித்தனர்.மேலும் நோயுற்ற மற்றும் ஊனமுற்றோருக்கு தங்குமிடம் நடத்தினர். படையெடுப்பின் போது அவர்கள் படையெடுப்பை மீறி ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்தனர். இதில் அவர்களில் சிலர் உயிரை இழக்க நேர்ந்தது.[13] 1980களில் குவைத்தில் இஸ்லாமியம் அதிகரித்துக்கொண்டிருந்தபோது பெண்கள் இஸ்லாமிய குழுக்களில் தீவிரமாக செயல்பட்டனர்.[14] இந்த குழுக்களில் அவர்களின் ஆரம்பகால செயல்பாட்டின் மூலம், பல பெண்கள் நிறுவன திறன்களைப் பெற்றனர். அவை வாக்குரிமைக்கான பிரச்சாரத்திலும் பயன்படுத்த முடிந்தது.[15]

கலைகளில் பெண்கள்[தொகு]

குவைத்தின் கலை வெளிப்பாட்டின் நீண்ட பாரம்பரியம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நுண்கலைகளில் பெண்களின் ஈடுபாடு குறைந்தது 1969ஆம் ஆண்டு முதல் நஜாத் சுல்தானும் அவரது சகோதரர் காசியும் சுல்தான் கண்காட்சிகளை நிறுவினர். இது அரபு கலையில் சமகால மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்களின் பிரச்சாரகராக பணியாற்றியது. ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு கண்காட்சி மூடப்பட்டு 2006இல் ஃபரிதா சுல்தானால் மீண்டும் திறக்கப்பட்டது. இது தற்போது சமகால புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது.[16] ஷேக்கா ஹுசா அல் சபா 1983ஆம் ஆண்டில் தார் அல்-அதர் அல்-இஸ்லாமியாவையும், 1992இல் சமகால கலைக்காக தார் அல்-ஃபனூன் என்ற கண்காட்சியையும் நிறுவினார்.[17]

குறிப்புகள்[தொகு]

  1. Gender Gap Report 2012 Page 52
  2. "The Global Gender Gap Report 2018" (PDF). World Economic Forum. pp. 10–11.
  3. "The Global Gender Gap Index 2014 - World Economic Forum". World Economic Forum.
  4. "Kuwait highest in closing gender gap: WEF".
  5. "Global Gender Gap Index Results in 2015". World Economic Forum.
  6. 6.0 6.1 "Kuwait: Selected Issues" (PDF). p. 17. Kuwait has higher female labor market participation than other GCC countries; further improvements in labor force participation can support future growth prospects. Kuwait's labor force participation rate for Kuwaiti women (53 percent) is slightly above the world average (51 percent) and much higher than the MENA average (21 percent).
  7. 7.0 7.1 "Kuwait leads Gulf states in women in workforce". Gulf News. 2016.
  8. al-Mughni, Haya (2001). Women in Kuwait: The Politics of Gender. London: Saqi. 
  9. Sweet, Louise E. (1970). Camel Raiding of North Arabian Bedouin: A Mechanism of Ecological Adaptation. New York. 
  10. "The Kuwaiti Labour Market and Foreign Workers: Understanding the Past and Present to Provide a Way Forward" (PDF). International Labour Organization. p. 13.
  11. "Kuwait: Selected Issues and Statistical Appendix". International Monetary Fund. 2012. p. 43.
  12. Al-Saddani, Noureya (1982). The Arab Women’s Movement in the 20th Century 1917-1981. Kuwait. 
  13. Maria, Julia; Hadi Ridha (2001). "Women and War: The Role Kuwaiti Women Played During the Iraqi Occupation". Journal of International Development 13: 583–598. doi:10.1002/jid.782. 
  14. Hirmats, Aiko (2011). "The Changing Nature of the Parliamentary System in Kuwait: Islamists, Tribes, and Women in Recent Elections". Kyoto Bulletin of Islamic Area Studies 4 (1&2): 62–73. http://www.asafas.kyoto-u.ac.jp/kias/pdf/kb4_1and2/08hiramatsu.pdf. பார்த்த நாள்: 2020-03-31. 
  15. al-Mughni, Haya (2010). "L’Émergence du Féminisme Islamique au Koweït". Revue des Mondes Musulmans et de la Méditerranée 128. http://remmm.revues.org/6899. பார்த்த நாள்: 2014-03-15. 
  16. "The Sultan Gallery". Archived from the original on 7 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "The Women Trailblazers of Gulf Arab Art". http://www.huffingtonpost.com/sultan-sooud-alqassemi/the-women-trailblazers-of-gulf-arab-art_b_3012443.html. பார்த்த நாள்: 6 April 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
People of Kuwait
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவைத்தில்_பெண்கள்&oldid=3929136" இலிருந்து மீள்விக்கப்பட்டது